விளையாட்டு

உலகக் கிண்ண சதுரங்க போட்டியில் பங்கேற்கும் யாழ் சிறுமி; தந்தை முன் வைத்த கோரிக்கை

  • May 13, 2025
  • 0 Comments

இணுவில் பகுதியைச் சேர்ந்த கஜிசனா தர்சன் என்ற சிறுமி, நடைபெறவுள்ள உலகக் கிண்ண சதுரங்க போட்டியில் எட்டு வயதுக்கு உட்பட்ட பெண்களுக்கான பிரிவு போட்டிக்கு தெரிவாகியுள்ளார்.  இது குறித்து அவரது தந்தை செவ்வாய்க்கிழமை (13) ஊடக சந்திப்பு ஒன்றை நடாத்தினார். இதன்போது அவர் கருத்து தெரிவிக்கையில், ”எனது மகள் 2025இல் நடைபெற உள்ள உலகக் கிண்ண சதுரங்க போட்டியில் எட்டு வயதுக்குட்பட்ட பெண்கள் பிரிவில் போட்டியிடுவதற்கு தெரிவாகியுள்ளார். எட்டு வயதிலேயே எனது மகளுக்கு இந்த சந்தர்ப்பம் கிடைத்ததையிட்டு […]

தகவல்கள்

கூகுள் நிறுவனத்துக்கு அபராதம்!

  • May 13, 2025
  • 0 Comments

பயனர்களின் தரவுகளைக் கசியவிட்டதற்காக கூகுள் நிறுவனத்திற்கு 1.4 பில்லியன் டொலர் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. 2022ஆம் ஆண்டில், அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தில் கூகுள் நிறுவனத்திற்கு எதிராக ஏராளமான வழக்குகள் தொடரப்பட்டன.இதன்படி கடந்த சில வாரமாக இதற்கான விசாரணை தீவிரமாக நடந்து வந்தது.இந்தநிலையில் குறித்த விவகாரத்தில் கூகுள் நிறுவனத்திற்கு அபராதம் விதித்து அமெரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

தகவல்கள்

புதிய பாப்பரசராக அமெரிக்காவைச் சேர்ந்த கர்தினால் ரொபர்ட் பிரான்ஸிஸ் பிரீவோஸ்ட் தெரிவு

  • May 9, 2025
  • 0 Comments

புதிய பாப்பரசராக அமெரிக்காவைச் சேர்ந்த கர்தினால் ரொபர்ட் பிரீவோஸ்ட் தெரிவு செய்யப்பட்டுள்ளார் பாப்பரசராக தெரிவு செய்யப்பட்டுள்ள முதல் அமெரிக்கர் இவராவர். புதிய பாப்பரசராக தெரிவு செய்யப்பட்டுள்ள கர்தினால் ரொபர்ட் பிரீவோஸ்ட் பாப்பரசர் 14 ஆம் லியோ (14 ஆம் சிங்கராயர்) என அழைக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், 267 ஆவது பாப்பரசராக 69 வயதுடைய பாப்பரசர் 14 ஆம் லியோ தெரிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தகவல்கள்

புதிய பாப்பரசரை தெரிவு செய்ய கர்தினால்கள் ஒன்று கூடல்

  • May 8, 2025
  • 0 Comments

கடந்த ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி பாப்பரசர் பிரான்சிஸ் தனது 88 ஆவது வயதில் நித்திய இளைப்பாறுதல் அடைந்தார். பாப்பரசர் பிரான்சிஸ் மறைவை தொடர்ந்து புதிய பாப்பரசரை தெரிவு செய்யும் மாநாட்டில் கர்தினால்கள் ஒன்று கூடியுள்ளார்கள். வத்திக்கானில் உள்ள 16ஆம் நூற்றாண்டை சேர்ந்த பாரம்பரியமிக்க சிஸ்டைன் சேப்பல் தேவாலயத்தில் புதிய பாப்பரசரை தெரிவு செய்வதற்கான இரகசிய ஆலோசனை மாநாடும் வாக்கெடுப்பும் கடந்த புதன்கிழமை (07) நடைபெற்றது. இந்நிலையில், வத்திக்கானில் தொலைத் தொடர்பு சேவை துண்டிக்கப்படவுள்ளது. சிஸ்டைன் […]

மருத்துவம்

வேகமாக சாப்பிடுவதால் ஏற்படும் தீமைகள்

  • April 25, 2025
  • 0 Comments

இன்றைய பரபரப்பான வாழ்க்கையில் நாம் அடிக்கடி உணவை உண்ணும் போது அவசரப்படுகிறோம்.ஆனால், இதனால் வரும் பின்விளைவை பற்றி யாரும் யோசிப்பது கூட இல்லை. அதற்கு நேரமும் கிடைப்பதில்லை. இந்த பதிவில் உணவை வேகமாக சாப்பிடுவதால் உண்டாகும் தீமைகள் குறித்து பார்ப்போம். அஜீரணம் மற்றும் வாயு நாம் உணவை விரைவாகச் சாப்பிடும்போது ​​உணவைச் சரியாக மென்று சாப்பிடுவதில்லை. இதன் காரணமாக பெரிய துண்டுகள் வயிற்றுக்குள் செல்கின்றன.அதை ஜீரணிக்க வயிறு கடினமாக உழைக்க வேண்டியிருக்கிறது. இதனால் அஜீரணம், வாய்வு மற்றும் […]

விளையாட்டு

இலங்கை மகளிர் கிரிக்கெட் அணியில் மீண்டும் இடதுகை சுழல்பந்துவீச்சாளர் இனோக்கா

  • April 24, 2025
  • 0 Comments

கொழும்பில் நடைபெறவுள்ள மகளிர் மும்முனை சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடரை முன்னிட்டு பெயரிடப்பட்டுள்ள 17 வீராங்கனைகளைக் கொண்ட இலங்கை மகளிர் கிரிக்கெட் குழாத்தில் அனுபவசாலியும் முன்னாள் தலைவியுமான சுழல்பந்துவீச்சாளர் இனோக்கா ரணவீர மீண்டும் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளார்.வழமையான அணித் தலைவி சமரி அத்தபத்து தலைமையிலான இலங்கை மகளிர் குழாத்துக்கு இனோக்காவுடன் ஹாசினி பெரேரா, ஹன்சிமா கருணாரட்ன ஆகியோரும் மீளழைக்கப்பட்டுள்ளனர். அத்துடன் மல்கி மதாரா, தெவ்மி விஹங்கா, பியூமி வத்சலா, 19 வயதுக்குட்பட்ட உலகக் கிண்ண வீராங்கனை ரஷ்மிக்கா செவ்வந்தி ஆகிய […]

மருத்துவம்

வழுக்கைத் தலையில் முடி வளரணுமா? 

  • April 23, 2025
  • 0 Comments

முடி உதிர்தல் ஒரு பொதுவான பிரச்சனையாக மாறிவிட்டது. இது வயது, மன அழுத்தம், ஹார்மோன் மாற்றங்கள் மற்றும் ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை காரணமாக ஏற்படலாம். பெரும்பாலான மக்கள் இந்தப் பிரச்சனையிலிருந்து விடுபட விலையுயர்ந்த முடி பராமரிப்புப் பொருட்களைப் பயன்படுத்துகிறார்கள்.ஆனால், இந்தப் பொருட்கள் சில சமயங்களில் முடிக்கு மேலும் சேதத்தை ஏற்படுத்தும். தலைக்கு எண்ணெய் நமக்கு குளிர்ச்சியை தரக்கூடியது. இந்த எண்ணெயுடன் சில பொருட்களை கலந்து பயன்படுத்தும் போது அது முடியின் வேர்கால் வரை சென்று வளர்ச்சியைத் தூண்டும். […]

சினிமா

சிவகார்த்திகேயன் அடுத்த படம்

  • April 23, 2025
  • 0 Comments

நடிகர் சிவகார்திகேயன் தற்போது ஓய்வில்லாத கதாநாயகனாக மாறி இருக்கிறார். சுதா கொங்கரா உடன் பராசக்தி, ஏ.ஆர்.முருகதாஸ் உடன் மதராஸி ஆகிய படங்களில் அவர் நடித்து வருகிறார்.அந்த இரண்டு படங்கள் மீதும் பெரிய எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. கார்த்திக் சுப்புராஜ் இந்நிலையில் சிவகார்த்திகேயனின் அடுத்த படத்தை இயக்க, இயக்குனர் கார்த்திக் சுப்புராஜுடன் பேச்சுவார்த்தை நடந்து வருகிறதாம்.சூர்யாவின் ரெட்ரோ படத்தை இயக்கியிருக்கும் கார்த்திக் சுப்புராஜ் அதன் வெளியீட்டுக்கான பணிகளை தற்போது மேற்கொண்டு வருகிறார். சிவகார்த்திகேயன் – கார்த்திக் சுப்புராஜ் கூட்டணி […]

விளையாட்டு

ஐபிஎல் 2025இல் அதிகதொகைக்கு எடுக்கப்பட்டு இன்னும் விளையாடாத வீரர்கள்

  • April 21, 2025
  • 0 Comments

நடப்பு ஐபிஎல் தொடரில் அதிகதொகைக்கு எடுக்கப்பட்டு இன்னும் ஒரு போட்டியில் கூட சில வீரர்கள் குறித்து இங்கே காண்போம்.  ஒரு போட்டியில் கூட விளையாடாத வீரர்கள் ஐபிஎல் 2025 தொடரில் இதுவரை 38 போட்டிகள் முடிந்துவிட்டன. ஆனாலும் சில வீரர்கள் இன்னும் களத்தில் இறக்கப்படவில்லை.அதிலும் குறிப்பாக, கோடிக்கணக்கில் ஏலத்தில் எடுக்கப்பட்ட வீரர்கள் இன்னும் ஒரு போட்டியில் கூட விளையாடவில்லை. மயங்க் யாதவ்: வேகப்பந்து வீச்சாளரான மயங்க் யாதவ் (Mayank Yadav) LSG அணியால் ரூ.11 கோடிக்கு வாங்கப்பட்டார்.இதுவரை நான்கு […]