மருத்துவம்

வேகமாக சாப்பிடுவதால் ஏற்படும் தீமைகள்

  • April 25, 2025
  • 0 Comments

இன்றைய பரபரப்பான வாழ்க்கையில் நாம் அடிக்கடி உணவை உண்ணும் போது அவசரப்படுகிறோம்.ஆனால், இதனால் வரும் பின்விளைவை பற்றி யாரும் யோசிப்பது கூட இல்லை. அதற்கு நேரமும் கிடைப்பதில்லை. இந்த பதிவில் உணவை வேகமாக சாப்பிடுவதால் உண்டாகும் தீமைகள் குறித்து பார்ப்போம். அஜீரணம் மற்றும் வாயு நாம் உணவை விரைவாகச் சாப்பிடும்போது ​​உணவைச் சரியாக மென்று சாப்பிடுவதில்லை. இதன் காரணமாக பெரிய துண்டுகள் வயிற்றுக்குள் செல்கின்றன.அதை ஜீரணிக்க வயிறு கடினமாக உழைக்க வேண்டியிருக்கிறது. இதனால் அஜீரணம், வாய்வு மற்றும் […]

விளையாட்டு

இலங்கை மகளிர் கிரிக்கெட் அணியில் மீண்டும் இடதுகை சுழல்பந்துவீச்சாளர் இனோக்கா

  • April 24, 2025
  • 0 Comments

கொழும்பில் நடைபெறவுள்ள மகளிர் மும்முனை சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடரை முன்னிட்டு பெயரிடப்பட்டுள்ள 17 வீராங்கனைகளைக் கொண்ட இலங்கை மகளிர் கிரிக்கெட் குழாத்தில் அனுபவசாலியும் முன்னாள் தலைவியுமான சுழல்பந்துவீச்சாளர் இனோக்கா ரணவீர மீண்டும் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளார்.வழமையான அணித் தலைவி சமரி அத்தபத்து தலைமையிலான இலங்கை மகளிர் குழாத்துக்கு இனோக்காவுடன் ஹாசினி பெரேரா, ஹன்சிமா கருணாரட்ன ஆகியோரும் மீளழைக்கப்பட்டுள்ளனர். அத்துடன் மல்கி மதாரா, தெவ்மி விஹங்கா, பியூமி வத்சலா, 19 வயதுக்குட்பட்ட உலகக் கிண்ண வீராங்கனை ரஷ்மிக்கா செவ்வந்தி ஆகிய […]

மருத்துவம்

வழுக்கைத் தலையில் முடி வளரணுமா? 

  • April 23, 2025
  • 0 Comments

முடி உதிர்தல் ஒரு பொதுவான பிரச்சனையாக மாறிவிட்டது. இது வயது, மன அழுத்தம், ஹார்மோன் மாற்றங்கள் மற்றும் ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை காரணமாக ஏற்படலாம். பெரும்பாலான மக்கள் இந்தப் பிரச்சனையிலிருந்து விடுபட விலையுயர்ந்த முடி பராமரிப்புப் பொருட்களைப் பயன்படுத்துகிறார்கள்.ஆனால், இந்தப் பொருட்கள் சில சமயங்களில் முடிக்கு மேலும் சேதத்தை ஏற்படுத்தும். தலைக்கு எண்ணெய் நமக்கு குளிர்ச்சியை தரக்கூடியது. இந்த எண்ணெயுடன் சில பொருட்களை கலந்து பயன்படுத்தும் போது அது முடியின் வேர்கால் வரை சென்று வளர்ச்சியைத் தூண்டும். […]

சினிமா

சிவகார்த்திகேயன் அடுத்த படம்

  • April 23, 2025
  • 0 Comments

நடிகர் சிவகார்திகேயன் தற்போது ஓய்வில்லாத கதாநாயகனாக மாறி இருக்கிறார். சுதா கொங்கரா உடன் பராசக்தி, ஏ.ஆர்.முருகதாஸ் உடன் மதராஸி ஆகிய படங்களில் அவர் நடித்து வருகிறார்.அந்த இரண்டு படங்கள் மீதும் பெரிய எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. கார்த்திக் சுப்புராஜ் இந்நிலையில் சிவகார்த்திகேயனின் அடுத்த படத்தை இயக்க, இயக்குனர் கார்த்திக் சுப்புராஜுடன் பேச்சுவார்த்தை நடந்து வருகிறதாம்.சூர்யாவின் ரெட்ரோ படத்தை இயக்கியிருக்கும் கார்த்திக் சுப்புராஜ் அதன் வெளியீட்டுக்கான பணிகளை தற்போது மேற்கொண்டு வருகிறார். சிவகார்த்திகேயன் – கார்த்திக் சுப்புராஜ் கூட்டணி […]

விளையாட்டு

ஐபிஎல் 2025இல் அதிகதொகைக்கு எடுக்கப்பட்டு இன்னும் விளையாடாத வீரர்கள்

  • April 21, 2025
  • 0 Comments

நடப்பு ஐபிஎல் தொடரில் அதிகதொகைக்கு எடுக்கப்பட்டு இன்னும் ஒரு போட்டியில் கூட சில வீரர்கள் குறித்து இங்கே காண்போம்.  ஒரு போட்டியில் கூட விளையாடாத வீரர்கள் ஐபிஎல் 2025 தொடரில் இதுவரை 38 போட்டிகள் முடிந்துவிட்டன. ஆனாலும் சில வீரர்கள் இன்னும் களத்தில் இறக்கப்படவில்லை.அதிலும் குறிப்பாக, கோடிக்கணக்கில் ஏலத்தில் எடுக்கப்பட்ட வீரர்கள் இன்னும் ஒரு போட்டியில் கூட விளையாடவில்லை. மயங்க் யாதவ்: வேகப்பந்து வீச்சாளரான மயங்க் யாதவ் (Mayank Yadav) LSG அணியால் ரூ.11 கோடிக்கு வாங்கப்பட்டார்.இதுவரை நான்கு […]

செய்தி

கனடாவில் சில உணவு வகைகள் தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள அவசர எச்சரிக்கை

  • April 21, 2025
  • 0 Comments

கனடாவில் (Canada) சில வகை குளிரூட்டப்பட்ட பேஸ்ட்ரிகளை பயன்படுத்த வேண்டாம் என கனேடிய உணவு பரிசோதனை நிறுவனம் (CFIA) எச்சரிக்கை விடுத்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த பேஸ்ட்ரிகளில் சால்மொனெல்லா பக்டீரியா பாதிப்பு ஏற்பட்டிருக்கக்கூடியதாக சந்தேகிப்பதாகத் தெரிவித்துள்ளது. இரு பண்டக்குறிகளைக் கொண்ட பதப்படுத்தி குளிரூட்டப்பட்ட பேஸ்ட்ரிகளை வாடிக்கையாளர்கள் பயன்படுத்துவதனை உடன் நிறுத்த வேண்டுமென எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட பேஸ்ட்ரி வகைகள் அதன்படி, Sweet Cream பிராண்ட் மற்றும் D. Effe T. பிராண்ட் ஆகிய இரண்டு வகை […]

தகவல்கள்

புதிய நிறம் கண்டுபிடிப்பு

  • April 21, 2025
  • 0 Comments

மனிதர்கள் இதுவரை பார்த்திராத புதிய நிறத்தை விஞ்ஞானிகள் கண்டுபிடித்திருக்கின்றனர். அறிவியல் உலகில் இது மிகப்பெரிய சாதனையாக பார்க்கப்படுகிறது. இந்த நிறத்தை வெறும் கண்களால் பார்க்க முடியாது என்றும் லேசர் உதவியால் மட்டுமே இதை பார்க்க முடியும் எனவும் விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.  கலிபோர்னியா பல்கலைக்ககழத்தின் கீழ் இயங்கும் பார்க்லியில் பணியாற்றும் விஞ்ஞானிகள் இந்த சாதனையை படைத்திருக்கின்றனர். இது குறித்து அவர்கள் கூறுகையில், “இந்த ஒளியை லேசர் மூலம் மட்டுமே பார்க்க முடியும். சாதாரணமாக வெறும் கண்களால் பார்க்க முடியாது. விஞ்ஞானிகள் […]

விளையாட்டு

மும்பை இந்தியன்ஸ் அணி அபார வெற்றி!

  • April 20, 2025
  • 0 Comments

ஐந்து முறை ஐ.பி.எல். கிண்ணத்தை வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இம்முறை ஏழு போட்டிகளில் விளையாடி இரண்டில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது.இந்நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் எட்டாவது ஆட்டத்தில் மும்பை இந்தியன்சை இன்று இரவு 7.30 மணிக்கு மீண்டும் சந்தித்து வருகிறது. மும்பை வான்கடே மைதானத்தில் இந்த போட்டி நடக்கிறது. இந்த போட்டிக்கான நாணயச் சுழற்சியில் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி பந்து வீச்சை தேர்வு செய்யவே சென்னை சூப்பர் கிங்ஸ் முதலாவதாக துடுப்பெடுத்தாட களமிறங்கியது. […]

செய்தி

ஜூலை பயங்கர சுனாமி தாக்கக் கூடும் ; பாபா வங்கா கணிப்பு

  • April 18, 2025
  • 0 Comments

எதிர்வரும் ஜூலை மாதத்தில் உலகை மிகப் பயங்கர சுனாமி தாக்கக் கூடும் என்று தீர்க்கதரிசி பாபா வங்கா கணித்துள்ளதாக கூறப்படுகின்றது. ஜப்பானின் பாபா வங்கா என்று அழைக்கப்படும் ரையோ தத்சுகி என்ற பெண், மிக விசித்திரமான முறையில் அதே வேளை, துல்லியமாக உலகில் நிகழவிருக்கும் அபாயங்கள் குறித்து முன் கணித்து வழங்கி வருகிறார்.அவை நிறைவேறியும் இருக்கின்றன. இதற்கு முன்பும் பாபா வங்கா கணிப்புகள் துல்லியமாக நடந்திருப்பதால், இவரது கணிப்புக்கள் உலகின் கவனத்தை ஈர்த்துள்ளது.மங்கு கலை ஓவியராக உலகுக்கு […]