தகவல்கள்

விண்வெளியில் விவசாயத்தை தொடங்கிய சுக்லா

  • July 10, 2025
  • 0 Comments

 அமெரிக்காவின் புளோரிடாவிலிருந்து ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ட்ராகன் விண்கலம் மூலம் சுபான்ஷ் சுக்லா உட்பட நால்வர் ஜுன் மாதம் 26 ஆம் திகதி விண்வெளிக்கு சென்றனர். இந்த நிலையில், சர்வதேச விண்வெளி நிலையத்தில் ஆய்வுகள் செய்து கொண்டிருக்கும் சுக்லா, தனது விண்வெளி பயணத்தின் இறுதிக்கட்டத்தில், அங்கு வெந்தயம், பச்சை பயிறு போன்ற தானியங்களை வளர்த்து வருவதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. பாத்திரங்களில் விளைந்திருக்கும் பச்சைப்பயறு மற்றும் வெந்தய விதைகளின் புகைப்படங்களை எடுத்து அவர் வெளியிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. […]

தகவல்கள்

வரலாறு காணாத உச்சத்தை எட்டியது பிட்காயின்

  • July 10, 2025
  • 0 Comments

 வரலாறு காணாத வகையில் பிட்காயின் மதிப்பு நேற்று (9) உயர்ந்து புதிய சாதனையை எட்டியது. கிட்டத்தட்ட $112,000 என்ற குறியீட்டை தொட்டது. தேவை அதிகரிப்பு மற்றும் சந்தையில் உள்ள ஆர்வம் ஆகியவை கிரிப்டோகரன்சி சந்தையில் தொடர்ந்து உத்வேகத்தை அளித்து வருவதாக கூறப்படுகிறது. உலகின் மிகவும் பிரபலமான டிஜிட்டல் நாணயமான பிட்காயின், நேற்று புதிய உச்சமாக $111,988.90 ஐ தொட்டது. கடைசியாக 0.4% உயர்ந்து $111,259 இல் வர்த்தகம் செய்யப்பட்டது. 2025 ஆம் ஆண்டின் தொடக்கத்திலிருந்து, பிட்காயின் 18% […]

மருத்துவம்

சின்ன வெங்காயத்தின் நன்மை குணங்கள்;

  • July 9, 2025
  • 0 Comments

சின்ன வெங்காயம் உடல் சூட்டை தணிக்கும் திறன் கொண்டது. இதனை சூடான காலநிலையிலும், காய்கரு மாறுதல்களை சமாளிக்கவும் பயன்படுத்துகின்றனர்.  சின்ன வெங்காயம் நமது சுவாசக்குழாய்களில் ஏற்படும் சளி, சிரமங்களை குறைத்து, சளி பிரச்சினைகளில் நிவாரணம் அளிக்கிறது. வெங்காயத்தில் உள்ள காந்தம் மற்றும் பொட்டாசியம் ஆகியவை மன அழுத்தத்தை குறைக்கும் தன்மைகளை கொண்டுள்ளன.  சின்ன வெங்காயம் கொழுப்பு அமிலங்களை குறைத்து, உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது. இதில் உள்ள ஆன்டிஆக்சிடன்ட்கள் உடலைத் தழுவி பாதுகாக்கின்றன. சல்பர் […]

மருத்துவம்

உடல் இளமையை பேணும் மருந்து கண்டுபிடிப்பு!

  • July 9, 2025
  • 0 Comments

முதியவர்களையும் இளைஞர்களாக மாற்றும் புதிய மருந்தை கண்டுபிடித்து உள்ளதாக கலிபோர்னியா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளமை அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. தற்போதைய சூழலில் பல வியாதிகளுக்கு மருந்து கண்டுபிடிக்கப்பட்டு விட்டது. ஆனால் முதுமை அடைவதை தடுக்க எந்த மருந்தும் கண்டுபிடிக்கவில்லை. எனினும் அதற்கான ஆய்வுகளும் தொடர்ந்து நடந்து வருகின்றது. இந்த நிலையில் கலிபோர்னியா பல்கலைக்கழக விஞ்ஞானிகள் மேற்கொண்டு வரும் ஆய்வில், பன்றி இரத்தத்தில் உள்ள பிளாஸ்மாக்கள் மற்றும் நானோ துகள்களை கொண்டு E5 எனப்படும் வயது எதிர்ப்பு சிகிச்சையை […]

செய்தி

இலங்கையில் அதியுச்சம் தொடும் வாகன விலை!

  • July 9, 2025
  • 0 Comments

இறக்குமதிக்காக ஒதுக்கப்பட்ட மீதமுள்ள 200 மில்லியன் அமெரிக்க டொலர்களைப் பயன்படுத்துவதற்கு அரசாங்கம் ஏதேனும் நிபந்தனைகளை விதித்தால், உள்ளூர் வாகனச் சந்தையில் கடுமையான விலை உயர்வு ஏற்படும் என இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின் (VIASL) தலைவர் பிரசாத் மானகே எச்சரிக்கை விடுத்துள்ளார். மத்திய வங்கியின் அண்மைய அறிக்கைகளின்படி, நிதி நிறுவனங்கள் ஏற்கனவே வாகன இறக்குமதிக்காக கிட்டத்தட்ட 800 மில்லியன் அமெரிக்க டொலர் மதிப்புள்ள கடன் பத்திரங்களை திறந்துள்ளன. இறக்குமதியை மீள ஆரம்பிப்பதற்கு 1 பில்லியன் அமெரிக்க டொலர் ஆரம்ப ஒதுக்கீடாகப் […]

தகவல்கள்

மட்டக்களப்பில் 2 வயது 10 மாத குழந்தை சாதனை !

  • May 22, 2025
  • 0 Comments

மட்டக்களப்பு -கொம்மாந்துறையைச் சேர்ந்த 2 வயது 10 மாதங்களேயான கிஷன்ராஜ் தன்யஸ்ரீ, 195 நாடுகளின் தலைநகரங்களின் பெயர்களை 5 நிமிடங்கள் 24 வினாடிகளில் கூறி, சோழன் உலக சாதனைப் புத்தகத்தில் இடம்பிடித்துள்ளார். இந்த சாதனை நிகழ்வு கடந்த 17ஆம் திகதி சனிக்கிழமை மக்கள் உதவிகள் மக்கள் பவுண்டேசனின் அனுசரணையுடன், மட்டக்களப்பு கிறீன் காடின் ஹோட்டலில் நடைபெற்றது. சோழன் உலக சாதனைப் புத்தகத்தின் இலங்கைக் கிளையின் செயலாளர் கதிரவன் ரி. இன்பராசா தலைமையில் இந்நிகழ்வு இடம்பெற்றது. இந்நிகழ்வில் பிரதம […]

சினிமா

சர்வதேச விருது விழாவில் சிறந்த நடிகர் விருதைப் பெற்ற செல்வின் தாஸ்

  • May 21, 2025
  • 0 Comments

அவுஸ்திரேலியா சிட்னி AZONWAY PICTURES செல்வின் தாஸ் வழங்கும் பாரம்பரிய கூத்து கலைஞர்களின் இன்றைய டிஜிட்டல் யுக போராட்டத்தை சித்திரிக்கும் முழு நீள திரைப்படம் வெளியிடப்பட்டது.  அவுஸ்திரேலியாவில் ATFIA 2025 (Australia Talent and Film International Award) நடத்திய சர்வதேச விருது வழங்கும் விழாவில் இந்த திரைப்படம் சார்பில் செல்வின் தாஸ் சிறந்த நடிகர் விருதைப் பெற்றுள்ளார். யாழ்ப்பாணத்தில் பிறந்த செல்வின் தாஸ் தற்போது அவுஸ்திரேலியாவில் வசித்து வருகிறார். திரைப்படத்துறையில் பல திரைப்படங்களை தயாரித்தும் கதாநாயகனாக […]

சினிமா

16 நாள் முடிவில் டூரிஸ்ட் ஃபேமிலி படம் செய்துள்ள மொத்த வசூல்.. மாஸ் கலெக்ஷன்

  • May 17, 2025
  • 0 Comments

டூரிஸ்ட் ஃபேமிலி சசிகுமார்-சிம்ரன் முதன்முறையாக ஜோடி சேர்ந்து நடித்துள்ள திரைப்படம் டூரிஸ்ட் ஃபேமிலி. நல்ல கதைக்களத்துடன் தயாரான இப்படம் புக் மை ஷோ ஒன்லைன் முன்பதிவு மூலமாக மட்டுமே 10 லட்சம் டிக்கெட்டுகள் விற்பனையாகியுள்ளது. சமீபத்தில் இந்த படத்தில் இருந்து நீக்கப்பட்ட சசிகுமாரின் ஹிட் பட பாடல் காட்சி வெளியிடப்பட்டது, அது ரசிகர்களிடம் செம ரெஸ்பான்ஸ் பெற்றுள்ளது. இந்த திரைப்படத்தை 25 வயதான இயக்குனர் அபுஜன் ஜிவி என்கிற புதுமுக இயக்குனர் இயக்கி இருந்தார், அவருக்கு பாராட்டு […]

சினிமா

பிரபாசுடன் நடிக்க தீபிகாவுக்கு ரூ.20 கோடி?

  • May 17, 2025
  • 0 Comments

பிரபல நடிகையான தீபிகா படுகோன், பிரபாசுடன் நடிக்கவுள்ள திரைப்படத்தில் இந்திய மதிப்பில் 20 கோடி ரூபாய் சம்பளம் கேட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பொலிவுட்டில் முன்னணி நடிகையாக இருப்பவர் தீபிகா படுகோன். இவர் நடிப்பில் அடுத்ததாக ‘ஸ்பிரிட்’ படம் உருவாகவுள்ளது. இயக்குநர் சந்தீப் ரெட்டி வங்கா இயக்கும் இத்திரைப்படத்தின் நாயகனாக பிரபாஸ் நடிக்கிறார். இந்த நிலையில், இப்படத்தின் முன் தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருகின்ற நிலையில், இப்படத்தில் கதாநாயகியாக நடிக்க நடிகை தீபிகா படுகோன் ரூ. 20 கோடி சம்பளம் […]

சினிமா

திரையுலக பிரபலங்கள் இணைந்து வெளியிட்ட ‘குமாரசம்பவம் ‘ படத்தின் எமோஷன் போஸ்டர் ‎

  • May 17, 2025
  • 0 Comments

புதுமுக நடிகர் குமரன் தங்கராஜன் கதையின் நாயகனாக அறிமுகமாகும் ‘ குமாரசம்பவம்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் எமோசன் போஸ்டர் ஆகியவை வெளியிடப்பட்டிருக்கிறது. இதனை தமிழ் திரையுலகின் முன்னணி பிரபலங்களான சசிகுமார்- ஆர்யா- சிம்ரன்- இயக்குநர்கள் புஷ்கர் & காயத்ரி ஆகியோர் இணைந்து ,அவர்களது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டு, படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர். ‎‎நடிகரும் இயக்குநருமான பாலாஜி வேணுகோபால் இயக்கத்தில் உருவாகி வரும் ‘ குமார சம்பவம்’ எனும் திரைப்படத்தில் குமரன் தங்கராஜன், ஜி எம் […]