தங்காலையில் இருவர் சுட்டுக் கொலை

  • November 18, 2025
  • 0 Comments

தங்காலையில் இன்று மாலை 68 வயது ஆணும் அவரது 59 வயது மனைவியும் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த சம்பவம் கடலோர நகர மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. மாலை 6.55 மணியளவில் உனகுருவாவின் கபுஹேன சந்தி பகுதியில் துப்பாக்கிச் சூடு நடந்ததாகவும், அங்கு அடையாளம் தெரியாத நபர்கள் தம்பதியினரை சுட்டுக் கொன்றதாகவும் போலீசார் தெரிவித்தனர். இதில் பாதிக்கப்பட்ட இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். விசாரணைகள் நடந்து வருகின்றன. அதே நேரத்தில் கொலைக்கான காரணம் இன்னும் காவல்துறையினரால் கண்டறியப்படவில்லை.

செய்தி

மனைவியை மிரட்ட சுருக்கு மாட்டியவர் மரணம்

  • November 15, 2025
  • 0 Comments

தற்கொலை செய்துகொள்வதாக மனைவியை மிரட்டுவதற்காக கழுத்தில் மாட்டப்பட்டிருந்த சுருக்கு இறுக்கியதில் மூச்சுத் திணறல் ஏற்பட்டு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நபர் இன்று (15) அதிகாலை உயிரிழந்தார்.  உரும்பிராய் தெற்கு பகுதியைச் சேர்ந்த 33 வயதான ஜெ. சுரேந்தன் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.  இது குறித்து மேலும் தெரியவருகையில்,  கடந்த எட்டாம் திகதி இரவு மதுபோதையில் வீட்டுக்கு வந்த சுரேந்தன், மனைவி மற்றும் பிள்ளைகளுடன் முரண்பட்டதையடுத்து அவர்கள் வீட்டை விட்டு வெளியேறினர். பின்னர் அவர் ஒரு […]

செய்தி

வட்டியற்ற கடன் திட்டத்திற்கு விண்ணப்பம் கோரல்

  • November 15, 2025
  • 0 Comments

கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சினால் நடைமுறைப்படுத்தப்படும் வட்டியற்ற மாணவர் கடன் திட்டத்தின் கீழ் பட்டப் படிப்புகளைக் கற்க மாணவர்களைச் சேர்த்துக்கொள்வதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.  இதன்படி, 2022, 2023 மற்றும் 2024 ஆம் ஆண்டுகளில் உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம் என அரசாங்கத் தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்தக் கடன் திட்டத்தின் கீழ், அரசாங்கத்தினால் அங்கீகரிக்கப்பட்ட 18 பட்டமளிப்பு நிறுவனங்கள் வழங்கும் 131 பட்டப் படிப்புகளுக்கு விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.  இதற்கான விண்ணப்பங்களை […]

தகவல்கள்

காந்தாரா பட ‘பூத கோலா’ வழிபாட்டின் பின்னணி

  • November 14, 2025
  • 0 Comments

காந்தாரா திரைப்படம் வெளியான பிறகு, பூத வழிபாடு பற்றிய ஆர்வம் அதிகரித்துள்ளது. சமீபத்தில், திருப்பதி திருமலை பிரம்மோற்சவத்தின் போது மாட வீதியில் சிலர் பூத வேடமணிந்து தெருக்களில் நடனமாடியது சர்ச்சையை ஏற்படுத்தியது. பூத வழிபாடு என்றால் என்ன? அது கடவுளை வழிபடுவதா அல்லது ஆவிகளை வழிபடுவதா? இந்த வழிபாட்டை யார், எங்கே செய்கிறார்கள் , ஏன் செய்கிறார்கள் என்பதைத் தெரிந்துகொள்வோம். பூத கோலா அல்லது தெய்வ கோலா என்பது துளுநாடு பகுதியைச் சேர்ந்த துளு பேசும் மக்களின் […]

விளையாட்டு

தொடரை கைப்பற்றிய நியூசிலாந்து

  • November 13, 2025
  • 0 Comments

மேற்கிந்தியத் தீவுகளுக்கெதிரான இருபதுக்கு – 20 சர்வதேச போட்டித் தொடரை நியூசிலாந்து கைப்பற்றியது. இத்தொடரின் முதலாவது போட்டியை மேற்கிந்தியத் தீவுகளும் அடுத்த இரண்டு போட்டிகளை நியூசிலாந்தும் வென்றதுடன், நான்காவது போட்டியில் முடிவேதும் பெறப்படாத நிலையில், டுனெடினில் வியாழக்கிழமை (13) நடைபெற்ற ஐந்தாவது போட்டியில் வென்றதன் மூலம் 3-1 என்ற ரீதியில் தொடரை நியூசிலாந்து கைப்பற்றியது. ஸ்கோர் விவரம்: நாணயச் சுழற்சி: நியூசிலாந்து மே. தீவுகள்: 140/10 (18.4 ஓவ. ) (துடுப்பாட்டம்: றொஸ்டன் சேஸ் 38 (32), […]

Influenza A,B செய்தி மருத்துவம்

இலங்கையில் இன்ஃபுளுவென்சா A & B பரவல்!

  • November 4, 2025
  • 0 Comments

மழை காலத்தில் இன்ஃபுளுவென்சா A மற்றும் B வைரஸ் வேகமாகப் பரவுவதாக சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். அறிகுறிகளாக திடீர் காய்ச்சல், இருமல், தொண்டை வலி,மூக்கோட்டம், சோர்வு, குளிர், குழந்தைகளுக்கு வாந்தி, வயிற்றுப்போக்கு ,ஆஸ்மாவுள்ளவர்களுக்கு மூச்சுத்திணறல் என்பன ஏற்படலாம்.தீவிர அறிகுறிகளாக வேகமான/சிரமமான சுவாசம், தொடர் வாந்தி,உணவு விருப்பமின்மை,அதிக தூக்கம் அல்லது சோர்வு என்பன ஏற்படலாம். தடுப்பு வழிமுறைகளாகஅடிக்கடி கைகளை கழுவுதல்,நோயுற்றவர்களை வெளியே அனுப்பாமல் வீட்டில் வைத்திருத்தல்,தடுப்பூசி செலுத்தல் என்பவற்றை மேற்கொள்வதோடு, எச்சரிக்கை அறிகுறிகள் தென்பட்டால் உடனே மருத்துவரை […]

செய்தி

இன்று வானில் தோன்றவுள்ள ஆச்சரியம்!

  • November 4, 2025
  • 0 Comments

ஆர்தர் சி. கிளார்க் நிறுவனம் இன்று இரவு ஒரு சூப்பர் மூன் தோன்றும் எனவும் இது சாதாரண முழு நிலவை விட கணிசமாக பெரியதாகவும் பிரகாசமாகவும் தோன்றும் எனவும் தெரிவித்துள்ளது. சூப்பர் மூன் இயல்பை விட சுமார் 14% பெரியதாகவும் சுமார் 30% பிரகாசமாகவும் இருக்கும் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.சந்திரனின் நீள்வட்ட சுற்றுப்பாதை பூமிக்கு அருகில் கொண்டு வருவதால் இந்த முறை சுமார் 356,980 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. ஆண்டின் மிகப்பெரிய சூப்பர் மூனான முழு நிலவு, […]

விளையாட்டு

T20 போட்டிகளில் இருந்து கேன் வில்லியம்சன் ஓய்வு

  • November 2, 2025
  • 0 Comments

நியூசிலாந்து அணியின் முன்னணி வீரரான கேன் வில்லியம்சன், சர்வதேச இருபதுக்கு 20 போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.  93 சர்வதேச இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டிகளில் விளையாடியுள்ள இவர் 2,575 ஓட்டங்களைக் குவித்துள்ளார். இதில் 18 அரை சதங்களும் உள்ளடங்குகின்றன. இந்த நிலையில் இவர் சர்வதேச இருபதுக்கு 20 போட்டிகளிலிருந்து ஓய்வினை அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

செய்தி

போக்குவரத்து அமைச்சு அதிரடி – கறுப்புப் பட்டியலில் இணைக்கப்பட்ட ஒப்பந்தக்காரர்கள்

  • November 2, 2025
  • 0 Comments

போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சு, இந்த வாரத்தில் நான்கு முன்னணி கட்டிட ஒப்பந்தக்காரர்களைக் கறுப்புப் பட்டியலில் சேர்த்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.  இதன்படி மூன்று ஆண்டுகள் முதல் ஆறு மாதங்கள் வரையிலான காலத்திற்கு அந்த ஒப்பந்தக்காரர்கள் கேள்விப்பத்திர விடயங்களில் பங்கேற்பதும் தடை செய்யப்பட்டுள்ளது.  நெடுஞ்சாலைத் துறையில் இதுபோன்ற நடவடிக்கை எடுக்கப்படுவது இதுவே முதல் முறை என்று கூறப்படுகிறது. குற்றச்சாட்டுகளின் அடிப்படையிலேயே இந்த தடை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.  இதன்படி, M/s Consulting Engineers & Contractors (Pvt) […]

சட்டவிரோதமாக ஐரோப்பா சென்ற இலங்கையர்கள் சுடப்பட்டு உயிரிழப்பு

  • November 1, 2025
  • 0 Comments

சட்டவிரோதமாக ஐரோப்பா சென்ற இலங்கையர் இருவர், துப்பாக்கிச் சூடு நடாத்தப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளனர். கிளிநொச்சி உருத்திரபுரத்தைச் சேர்ந்த சமுர்த்தி உத்தியோகத்தர் ஆட்கடத்தல் காரர்கள் மூலம் சட்டவிரோதமாக வெளிநாடு சென்ற நிலையில், கடந்த 30 ஆம் திகதி பெலாரஸ் எல்லையில் அந்நாட்டு இராணுவத்தினரால் சுடப்பட்டு உயிரிழந்துள்ளார். இதன்போது, அவருடன் இருந்த மற்றுமொரு இலங்கையரும் சுட்டுக் கொல்லப்பட்டதாக அந் நாட்டு தகவல்கள் தெரிவித்துள்ளன.குறித்த இருவரும் பெலாரஸ் நாட்டின் எல்லைப் பகுதியில் உள்ள அடர்காட்டுப் பகுதியில் விலங்குகள் நுழையும் பகுதிக்குள்ளால் மற்றுமொரு நாட்டுக்குள் நுழைய […]