விளையாட்டு

இலங்கை மகளிர் கிரிக்கெட் அணியில் மீண்டும் இடதுகை சுழல்பந்துவீச்சாளர் இனோக்கா

கொழும்பில் நடைபெறவுள்ள மகளிர் மும்முனை சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடரை முன்னிட்டு பெயரிடப்பட்டுள்ள 17 வீராங்கனைகளைக் கொண்ட இலங்கை மகளிர் கிரிக்கெட் குழாத்தில் அனுபவசாலியும் முன்னாள் தலைவியுமான சுழல்பந்துவீச்சாளர் இனோக்கா ரணவீர மீண்டும் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளார்.வழமையான அணித் தலைவி சமரி அத்தபத்து தலைமையிலான இலங்கை மகளிர் குழாத்துக்கு இனோக்காவுடன் ஹாசினி பெரேரா, ஹன்சிமா கருணாரட்ன ஆகியோரும் மீளழைக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன் மல்கி மதாரா, தெவ்மி விஹங்கா, பியூமி வத்சலா, 19 வயதுக்குட்பட்ட உலகக் கிண்ண வீராங்கனை ரஷ்மிக்கா செவ்வந்தி ஆகிய நால்வரும் அறிமுக வீராங்கனைகளாக குழாத்தில் பெயரிடப்பட்டுள்ளனர்.இந்த நால்வரில் மல்கி மந்தாரா கடந்த மாதம் நடைபெற்ற நியூஸிலாந்துக்கு எதிரான சர்வதேச ரி20 கிரிக்கெட் தொடரில் உதேஷிகா ப்ரபோதனிக்குப் பதிலாக இலங்கை அணியில் விளையாடி இருந்தார்.

அவர் தனது அறிமுகப் போட்டியில் மூன்று விக்கெட்களைக் கைப்பற்றி இலங்கையின் வெற்றியில் முக்கிய பங்காற்றியிருந்தார்.நியூஸிலாந்துக்கு எதிரான கடைசி போட்டியில் செவ்வந்தி இடம்பெற்றபோதிலும் அவர் களத்தடுப்பில் மாத்திரமே ஈடுபட்டார்.

நியூஸிலாந்துக்கான கிரிக்கெட் விஜயத்தில் இடம்பெற்ற இமேஷா துலானி, சச்சினி நிசன்சலா, கௌஷினி நுத்யங்கனா ஆகியோர் மும்முனை தொடருக்கான குழாத்தில் இடம்பெறவில்லை.

இலங்கை, இந்தியா, தென் ஆபிரிக்கா ஆகிய அணிகள் மோதும் மகளிர் மும்முனை சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடர் ஆர். பிரேமதாச விளையாட்டரங்கில் ஞாயிற்றுக்கிழமை (27) நடைபெறவுள்ள இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான போட்டியுடன் ஆரம்பமாகவுள்ளது.

இந்தியாவில் இந்த வருடம் நடைபெறவுள்ள ஐசிசி மகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிக்கு தயாராகும் வகையில் இந்தத் தொடர் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இலங்கை மகளிர் குழாம்

சமரி அத்தபத்து (தலைவி), விஷ்மி குணரட்ன, ஹர்ஷித்தா சமரவிக்ரம, நிலக்ஷி சில்வா, கவிஷா டில்ஹாரி, அனுஷ்கா சஞ்சீவனி, ஹாசினி பெரேரா, பியூமி வத்சலா, மனுதி நாணயக்கார, தெவ்மி விஹங்கா, இனோக்கா ரணவீர, இனோஷி பெர்னாண்டோ, ஹன்சிமா கருணாரட்ன, ரஷ்மிக்கா செவ்வந்தி, மல்கி மதாரா, சுகந்தி குமாரி, அச்சினி குலசூரிய.

You may also like

விளையாட்டு

சென். பற்றிக்ஸ் வெற்றிக் கிண்ணத்தை சுவீகரித்தது

யாழ். சென். பற்றிக்ஸ் கல்லூரிக்கும் வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரிக்கும் இடையில் சென். பற்றிக்ஸ் கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற 50 ஓவர் கிரிக்கெட் போட்டியில் ஐந்து விக்கெட்களால் வெற்றிபெற்று
விளையாட்டு

சென்னை சுப்பர் கிங்ஸிடம் வீழ்ந்த லக்னோ சுப்பர் ஜெயண்ட்ஸ்

ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் எகானா கிரிக்கெட் மைதானத்தில் இன்று (14)நடைபெறும் லீக் போட்டியில் மகேந்திர சிங் தோனி தலைமையிலான சென்னை சுப்பர் கிங்ஸ்- ரிஷப் பந்த் தலைமையிலான லக்னோ