விளையாட்டு

உலகக் கிண்ண சதுரங்க போட்டியில் பங்கேற்கும் யாழ் சிறுமி; தந்தை முன் வைத்த கோரிக்கை

இணுவில் பகுதியைச் சேர்ந்த கஜிசனா தர்சன் என்ற சிறுமி, நடைபெறவுள்ள உலகக் கிண்ண சதுரங்க போட்டியில் எட்டு வயதுக்கு உட்பட்ட பெண்களுக்கான பிரிவு போட்டிக்கு தெரிவாகியுள்ளார்.  இது குறித்து அவரது தந்தை செவ்வாய்க்கிழமை (13) ஊடக சந்திப்பு ஒன்றை நடாத்தினார்.

இதன்போது அவர் கருத்து தெரிவிக்கையில், ”எனது மகள் 2025இல் நடைபெற உள்ள உலகக் கிண்ண சதுரங்க போட்டியில் எட்டு வயதுக்குட்பட்ட பெண்கள் பிரிவில் போட்டியிடுவதற்கு தெரிவாகியுள்ளார்.

எட்டு வயதிலேயே எனது மகளுக்கு இந்த சந்தர்ப்பம் கிடைத்ததையிட்டு மகிழ்ச்சியடைகிறேன். அதுமட்டுமல்ல, எனது மகள் இந்த ஆண்டு ஐந்து சர்வதேச போட்டிகளில் விளையாடவுள்ளார். கடந்த மாதம் அல்பேனியாவில் நடைபெற்ற மேற்கு ஆசிய இளையோர்களுக்கான போட்டி நடைபெற்றது.

அந்த போட்டியில் பங்குபற்றுவதற்கு நிதி அனுசரணையாளர்கள் கிடைக்காததால் அதில் பங்குபற்ற முடியவில்லை. இவர் கடந்த வருடம் தேசிய ரீதியாக நடைபெற்ற சதுரங்க போட்டியில் முதலிடம் பெற்று, இலங்கையின் எட்டு வயதுக்குட்பட்ட பெண்கள் பிரிவில் உத்தியோகபூர்வ வீரராக தெரிவு செய்யப்பட்டு தாய்லாந்தில் நடைபெற்ற ஆசிய பாடசாலைகள் இறுதிப் போட்டியில் கலந்து கொண்டு இரண்டு சர்வதேச வெண்கலப் பதக்கங்களை பெற்றுக் கொண்டார்.

மேலும், கடந்த டிசம்பர் மாதம் உலகளவிலான ரப்பிட் செஸ் தரப்படுத்தலில் இரண்டாவது இடத்தில் காணப்பட்டார்.  எனவே, அவர் தொடர்ந்து சர்வதேச போட்டிகளில் எமது நாட்டினை பிரதிநிதித்துவப்படுத்தி விளையாடுவதற்கு நிதி வசதி தேவையாகவுள்ளது.

எனவே, நிதி அனுசரணையாளர்கள் ஆதரவு வழங்கும் பட்சத்தில் எமது பிள்ளை மேலும் பல போட்டிகளில் பங்குபற்றி எமது மண்ணுக்கு பெருமை சேர்க்க வழிவகுக்கும்” என்றார்.

You may also like

விளையாட்டு

சென். பற்றிக்ஸ் வெற்றிக் கிண்ணத்தை சுவீகரித்தது

யாழ். சென். பற்றிக்ஸ் கல்லூரிக்கும் வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரிக்கும் இடையில் சென். பற்றிக்ஸ் கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற 50 ஓவர் கிரிக்கெட் போட்டியில் ஐந்து விக்கெட்களால் வெற்றிபெற்று
விளையாட்டு

சென்னை சுப்பர் கிங்ஸிடம் வீழ்ந்த லக்னோ சுப்பர் ஜெயண்ட்ஸ்

ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் எகானா கிரிக்கெட் மைதானத்தில் இன்று (14)நடைபெறும் லீக் போட்டியில் மகேந்திர சிங் தோனி தலைமையிலான சென்னை சுப்பர் கிங்ஸ்- ரிஷப் பந்த் தலைமையிலான லக்னோ