மட்டக்களப்பில் 2 வயது 10 மாத குழந்தை சாதனை !
மட்டக்களப்பு -கொம்மாந்துறையைச் சேர்ந்த 2 வயது 10 மாதங்களேயான கிஷன்ராஜ் தன்யஸ்ரீ, 195 நாடுகளின் தலைநகரங்களின் பெயர்களை 5 நிமிடங்கள் 24 வினாடிகளில் கூறி, சோழன் உலக சாதனைப் புத்தகத்தில் இடம்பிடித்துள்ளார். இந்த சாதனை நிகழ்வு கடந்த 17ஆம் திகதி சனிக்கிழமை மக்கள் உதவிகள் மக்கள் பவுண்டேசனின் அனுசரணையுடன், மட்டக்களப்பு கிறீன் காடின் ஹோட்டலில் நடைபெற்றது. சோழன் உலக சாதனைப் புத்தகத்தின் இலங்கைக் கிளையின் செயலாளர் கதிரவன் ரி. இன்பராசா தலைமையில் இந்நிகழ்வு இடம்பெற்றது. இந்நிகழ்வில் பிரதம […]








