செய்தி வணிகம்

கிரிப்டோ சந்தையில் பாரிய வீழ்ச்சி!

  • October 19, 2025
  • 0 Comments

கிரிப்டோ கரன்சி சந்தையில் ஒரே நாளில் 230 பில்லியன் டொலர் சரிவு ஏற்பட்டுள்ளது.கிரிப்டோகரன்சி மதிப்பானது எப்போதும் குறையாது என்ற நம்பிக்கையில் பலர் இருந்து வருகின்றனர்.இந்த நிலையில், சமீபமாக கிரிப்டோ சந்தையிலும் நிலையற்ற தன்மை இருந்து வருகின்றது. இதன் தொடர்ச்சியாக வெள்ளிக்கிழமை வெறும் நான்கு மணிநேரத்தில்128 டொலர் சரிந்ததுடன், ஒரே நாளில் 230 பில்லியன் டொலர் சரிந்துள்ளது.வியாழக்கிழமையில் இருந்த 3.78 டிரில்லியன் டொலரில் இருந்து, 3.54 டிரில்லியன் டொலர் வெள்ளிக்கிழமையில் சரிவடைந்துள்ளது. 2022 இல் நிகழ்ந்த எஃப்டிஎக்ஸ் (FTX) […]

செய்தி

போதைப்பொருள் கொடுத்து கூட்டாக பலாத்காரம் செய்யப்பட்ட பேராசிரியை

  • October 19, 2025
  • 0 Comments

கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தை சேர்ந்தவர் பிரோஸ் (வயது 28). இவரது நண்பர் கோட்டயம் மாவட்டத்தை சேர்ந்த மார்டின் ஆண்டனி (27). இவர்களுக்கு ஒரு நிகழ்ச்சி மூலம் கல்லூரி பேராசிரியை அறிமுகம் ஆனார். இந்தநிலையில் பிரோஸ், மார்டின் ஆண்டனி ஆகிய இருவரும் பேராசிரியையை  கொச்சிக்கு வரவழைத்து, எம்.டி.எம்.ஏ. என்ற உயர் ரக போதைப்பொருள், கஞ்சா ஆகியவற்றை வலுக்கட்டாயமாக கொடுத்துள்ளதாக தெரிகிறது. பின்னர் மயக்கமடைந்த நிலையில் பேராசிரியையை களமச்சேரி, நெடும்பாசேரி ஆகிய இடங்களுக்கு அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் […]

மருத்துவம்

​​அப்பிள்கள் ஏன் ஸ்டிக்கருடன் விற்கப்படுகிறது தெரியுமா?

  • October 19, 2025
  • 0 Comments

​​அப்பிள் வாங்கும்போது, ​​அதன் மீது ஒரு ஸ்டிக்கர் ஒட்டப்பட்டிருப்பதைப் பார்க்கிறோம். ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட ​​அப்பிள்கள் தரம் வாய்ந்ததாகவும் அதிக விலை கொண்டதாகவும் இருப்பதால் அந்த ஸ்டிக்கர் ஒட்டப்பட்டிருப்பதாக குறிப்பிட்டு விற்பனையாளர்கள் விற்பனை செய்வார்கள். உண்மையில் எதற்காக அவ்வாறு அப்பிளில் ஸ்டிக்கர் ஒட்டி விற்கப்படுகிறது என்பது குறித்து 99% பேருக்கு தெரியாது. நிபுணர்களின் கூற்றுப்படி, அப்பிள் மட்டுமல்ல, ஒரஞ்சுகளும் இப்போது ஸ்டிக்கர்களுடன் விற்கப்படுகின்றன. ஸ்டிக்கர்களுடன் கூடிய பளபளப்பான அப்பிள்களைப் பார்க்கும் பெரும்பாலான மக்கள் அவை விலை உயர்ந்தவை என்று […]

மருத்துவம்

மற்றவர் கொட்டாவி விடுவதை பார்த்தால் நமக்கு ஏன் கொட்டாவி வருகிறது?

  • October 19, 2025
  • 0 Comments

பொதுவாக, நமக்கு சலிப்பாக இருக்கும்போது கொட்டாவி விடுகிறோம் என்று சொல்வார்கள். ஆனால்,அதைவிட முக்கியமாக குளிர்காலத்தில் கொட்டாவி விடுவது குறைவு.ஆனால், கோடை காலத்தில் கொட்டாவி விடுவது அதிகம். ஏனென்றால், கோடை காலத்தில் மூளை சூடாகிறது. அதனால், நாம் கொட்டாவி விடும்போது உள்ளிழுக்கிற ஆக்சிஜன், மூளைக்கு ரத்த ஓட்டத்தை அதிகரித்து, மூளையைக் குளிர்விக்கிறது. ஆக, மூளை குளிர்ச்சி அடைவதற்காக கொட்டாவி ஏற்படுகிறது. நாம் கொட்டாவி விடும்போது அருகில் இருக்கும் மற்றொருவர் ஏன் கொட்டாவி விடுகிறார்? இந்தக் கேள்விக்கு பதில் இருக்கிறது. […]

செய்தி

மார்பக புற்று நோய்–ஒரு நாளைக்கு மூவர் உயிரிழப்பு!

  • October 18, 2025
  • 0 Comments

இன்றைய காலகட்டத்தில் உலகளாவிய ரீதியில் அதிகப்படியான பெண்கள் மார்பகப் புற்றுநோயினால் பாதிக்கப்படுவதாகவும் இலங்கையில் ஒரு நாளைக்கு மூன்று பேர் மரணிப்பதாகவும் தினசரி 15 நோயாளிகள் இனம் காணப்படுவதாகவும் ஆய்வறிக்கை மூலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மார்பகப் புற்றுநோய் இளம் வயதிலேயே கண்டுபிடிக்கப்பட்டால் அதனை குணப்படுத்த முடியும் எனவும் பெண்கள் தினசரி தம்மை சுய பரிசோதனை மூலம் இந்த நோயிலிருந்து காப்பாற்றிக் கொள்ள முடியும் எனவும் விழிப்புணர்வு நிகழ்வு ஒன்றின்போது அதிதியாக கலந்துகொண்ட மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் […]

கிழக்கு தமிழ் பாடசாலைகளுக்கு விடுமுறை

  • October 18, 2025
  • 0 Comments

கிழக்கு மாகாண தமிழ் பாடசாலைகளுக்கு, தீபாவளிக்கு மறுநாள், 21ஆம் திகதியன்று  விடுமுறை வழங்கப்பட்டுள்ளது என கிழக்கு மாகாண கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. இவ்விடுமுறைக்கு பதிலாக எதிர்வரும் (25) சனிக்கிழமை பாடசாலைகளை நடாத்துமாறு சகல அதிபர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. 

செய்தி

இன்று 100 மில்லி மீற்றர் மழை

  • October 18, 2025
  • 0 Comments

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிற்பகல் ஒரு மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மத்திய , சப்ரகமுவ, வடமத்திய, வடமேல் மற்றும் ஊவா மாகாணங்களின் சில இடங்களி்ல் 100 மில்லி மீற்றர் வரையிலான பலத்த மழை பெய்யக்கூடும் . மேல் மற்றும் தென் கரையோரப் பிராந்தியங்களில் காலை வேளையிலும் மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

செய்தி

முன்னாள் காதலர் பற்றி இஷாரா வெளியிட்ட தகவல்

  • October 18, 2025
  • 0 Comments

கணேமுல்ல சஞ்சீவ கொலைச் சம்பவ முக்கிய சந்தேகநபரான இஷாரா செவ்வந்தியிடம் கொழும்பு குற்றப் பிரிவினர் மேற்கொண்ட விசாரணையில், மேலும் பல தகவல்களை வெளியிட்டுள்ளார். தனது முன்னாள் காதலரும் போதைப்பொருள் கடத்தல்காரருமான ஒருவரின் மூலம் ‘கெஹெல்பத்தர பத்மே’ என்பவரைத் தான் சந்தித்ததாக இஷாரா செவ்வந்தி தெரிவித்துள்ளார். கணேமுல்ல சஞ்சீவ கொலையின் சூத்திரதாரி எனக் கூறப்படும் சமிந்து தில்ஷான் பியுமங்க என்பவரை ‘பத்மே’ தனக்கு அறிமுகப்படுத்தியதாகவும் இஷாரா கூறியுள்ளார். “எப்படியாவது அவனை வைத்து வேலையை முடித்துக்கொள்” என்று ‘பத்மே’ தன்னிடம் […]

கல்வி

மாணவர்களுக்கு இனி பாடப்புத்தகம் இல்லை

  • October 18, 2025
  • 0 Comments

அடுத்த கல்வியாண்டில், தரம் 1 மற்றும் தரம் 6 மாணவர்களுக்கு பாடப்புத்தகங்கள் வழங்கப்படாது என்று கல்வி பிரதி அமைச்சர் மதுர செனவிரத்ன தெரிவித்துள்ளார். புதிய கல்வி சீர்திருத்தங்களின் கீழ், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.  இதன்படி, தரம் 1 மற்றும் தரம் 6 மாணவர்களுக்கு சுய கற்றல் கையேடுகள் வழங்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த சுய கற்றல் கையேடுகள் தற்போது அச்சிடப்படுவதாகவும் தெரிவித்துள்ளார். இதனையடுத்து, குறித்த தரங்களில் கற்கும் மாணவர்களுக்கான பாடசாலை பைகளின் எடையும் குறைக்கப்படும் என்று அவர் […]

தீபாவளிக்கு மதுபானசாலைகளுக்கு பூட்டு

  • October 18, 2025
  • 0 Comments

தீபாவளி தினத்தன்று வட மாகாணத்திலுள்ள அனைத்து மதுபான சாலைகளையும் மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.ஜனாதிபதியிடம் வடக்கு மாகாண ஆளுநர் முன்வைத்த கோரிக்கைக்கு அமைய, இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தீர்மானம் தொடர்பில், மது வரித் திணைக்களத்தால் மாவட்ட அரசாங்க அதிபர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக, ஆளுநர் செயலகம் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.