இன்றைய காலகட்டத்தில் உலகளாவிய ரீதியில் அதிகப்படியான பெண்கள் மார்பகப் புற்றுநோயினால் பாதிக்கப்படுவதாகவும் இலங்கையில் ஒரு நாளைக்கு மூன்று பேர் மரணிப்பதாகவும் தினசரி 15 நோயாளிகள் இனம் காணப்படுவதாகவும் ஆய்வறிக்கை மூலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மார்பகப் புற்றுநோய் இளம் வயதிலேயே கண்டுபிடிக்கப்பட்டால் அதனை குணப்படுத்த முடியும் எனவும் பெண்கள் தினசரி தம்மை சுய பரிசோதனை மூலம் இந்த நோயிலிருந்து காப்பாற்றிக் கொள்ள முடியும் எனவும் விழிப்புணர்வு நிகழ்வு ஒன்றின்போது அதிதியாக கலந்துகொண்ட மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ரா. முரளீஸ்வரன் தெரிவித்தார்.

