அப்பிள் வாங்கும்போது, அதன் மீது ஒரு ஸ்டிக்கர் ஒட்டப்பட்டிருப்பதைப் பார்க்கிறோம். ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட அப்பிள்கள் தரம் வாய்ந்ததாகவும் அதிக விலை கொண்டதாகவும் இருப்பதால் அந்த ஸ்டிக்கர் ஒட்டப்பட்டிருப்பதாக குறிப்பிட்டு விற்பனையாளர்கள் விற்பனை செய்வார்கள்.
உண்மையில் எதற்காக அவ்வாறு அப்பிளில் ஸ்டிக்கர் ஒட்டி விற்கப்படுகிறது என்பது குறித்து 99% பேருக்கு தெரியாது. நிபுணர்களின் கூற்றுப்படி, அப்பிள் மட்டுமல்ல, ஒரஞ்சுகளும் இப்போது ஸ்டிக்கர்களுடன் விற்கப்படுகின்றன. ஸ்டிக்கர்களுடன் கூடிய பளபளப்பான அப்பிள்களைப் பார்க்கும் பெரும்பாலான மக்கள் அவை விலை உயர்ந்தவை என்று நினைக்கிறார்கள். பெரும்பாலான விற்பனையாளர்கள் அப்பிள்களை ஸ்டிக்கர் ஒட்டி அதிக விலைக்கு விற்கிறார்கள். ஆனால் இந்த ஸ்டிக்கர் ஆரோக்கியத்துடன் நேரடியாக தொடர்புடையது. எனவே, நீங்கள் ஒரு அப்பிள் வாங்கும் போது, அப்பிளில் இருக்கும் ஸ்டிக்கரைப் படியுங்கள்.
அப்பிளில் இருக்கும் ஸ்டிக்கரில் பழத்தின் தரம் மற்றும் அது எப்படி வளர்க்கப்பட்டது என்பது பற்றிய தகவல்கள் உள்ளன. சில ஸ்டிக்கர்களில் நான்கு இலக்க எண்கள் இருக்கும். அதாவது, அவை 4026 அல்லது 4987 போன்ற எண்களைக் கொண்டுள்ளன. இந்த பழங்கள் பூச்சிகொல்லிகள் மற்றும் ரசாயனங்களைப் பயன்படுத்தி வளர்க்கப்பட்டவை என்பதைக் குறிக்கிறது. இந்தப் பழங்களில் பூச்சிகொல்லிகள் பயன்படுத்தப்படுகின்றன. இந்த பழங்கள் மலிவானவை. நீங்கள் அவற்றை வாங்கினால் உரங்கள் மற்றும் பூச்சிகொல்லிகள் உள்ள பழங்களை வாங்குகிறீர்கள் என்று அர்த்தம்.
சில பழங்களில் ஐந்து இலக்க எண்கள் இருக்கும். அதாவது, 84131, 86532 போன்ற எட்டில் தொடங்கும் இந்தப் பழங்கள் மரபணு மாற்றம் செய்யப்பட்டவை. இந்தப் பழங்கள் இயற்கையானவை அல்ல. பூச்சிகொல்லி மருந்து அடிக்கப்பட்ட பழங்களை விட அவை விலை சற்று அதிகம்.
சில பழங்களில் ஒன்பதில் தொடங்கும் ஐந்து இலக்க குறியீடு இருக்கும். 93435 என்று சொன்னால், பழம் இயற்கை முறையில் விளைந்தது என்றும் பூச்சிகொல்லிகள் அல்லது ரசாயனங்கள் பயன்படுத்தப்படவில்லை என்றும் அர்த்தம். பாதுகாப்பான பழம் என்றாலும் விலை கொஞ்சம் அதிகமாகத் தான் இருக்கும். இனிமேல் ஸ்டிக்கரில் உள்ள எண்களை பார்த்து பழங்களை வாங்குகள்!

