செய்தி வணிகம்

கிரிப்டோ சந்தையில் பாரிய வீழ்ச்சி!

கிரிப்டோ கரன்சி சந்தையில் ஒரே நாளில் 230 பில்லியன் டொலர் சரிவு ஏற்பட்டுள்ளது.கிரிப்டோகரன்சி மதிப்பானது எப்போதும் குறையாது என்ற நம்பிக்கையில் பலர் இருந்து வருகின்றனர்.இந்த நிலையில், சமீபமாக கிரிப்டோ சந்தையிலும் நிலையற்ற தன்மை இருந்து வருகின்றது.

இதன் தொடர்ச்சியாக வெள்ளிக்கிழமை வெறும் நான்கு மணிநேரத்தில்128 டொலர் சரிந்ததுடன், ஒரே நாளில் 230 பில்லியன் டொலர் சரிந்துள்ளது.வியாழக்கிழமையில் இருந்த 3.78 டிரில்லியன் டொலரில் இருந்து, 3.54 டிரில்லியன் டொலர் வெள்ளிக்கிழமையில் சரிவடைந்துள்ளது.

2022 இல் நிகழ்ந்த எஃப்டிஎக்ஸ் (FTX) பரிமாற்றத்தின் வீழ்ச்சியையே இச் சரிவு நினைவூட்டுவதாக முதலீட்டாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

அமெரிக்கா (United States) மற்றும் சீனா (China) உறவு நிலையற்றதாக இருக்கும் வரையில் கிரிப்டோ சந்தையும் நிலையாக இருக்க முடியாது.அத்துடன், அடிப்படை நிதி நிலைமைகள் சரியாக இல்லாத போது, பிட்காயினோ மற்றும் எத்தீரியமோ எதுவானாலும் கிரிப்டோ நாணயங்கள் தங்களின் மதிப்பை நிலைநிறுத்துவதில் சிரமப்படும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

குறித்த விடயத்தை அமெரிக்காவை சேர்ந்த வர்த்தகத் துறை இயக்குநர் ஜுவான் பெரெஸ் (Juan Perez) தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

You may also like

செய்தி

‘கிளீன் ஸ்ரீ லங்கா’வின் கீழ் 34 புதிய திட்டங்கள்

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் அறிவுறுத்தல்களின்படி, அரசாங்கத்தின் பிரதான திட்டமாக செயற்படுத்தப்படும் “கிளீன் ஸ்ரீலங்கா” திட்டத்தின் கீழ், இந்த ஆண்டு 34 புதிய திட்டங்களை செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
செய்தி

ஐரோப்பாவில் புதிய வைரஸ்:நாடுகளின் எல்லைகள் மூடல்

மத்திய ஐரோப்பிய நாடான ஹங்கேரியில் உள்ள கால்நடை பண்ணையில் கால் மற்றும் வாய் நோய் முதலில் பரவியதாக தகவல் வெளியானது. இதை தடுக்க ஆயிரக்கணக்கான கால்நடைகள் கொல்லப்பட்டுள்ளன.