செய்தி

முன்னாள் காதலர் பற்றி இஷாரா வெளியிட்ட தகவல்

கணேமுல்ல சஞ்சீவ கொலைச் சம்பவ முக்கிய சந்தேகநபரான இஷாரா செவ்வந்தியிடம் கொழும்பு குற்றப் பிரிவினர் மேற்கொண்ட விசாரணையில், மேலும் பல தகவல்களை வெளியிட்டுள்ளார்.

தனது முன்னாள் காதலரும் போதைப்பொருள் கடத்தல்காரருமான ஒருவரின் மூலம் ‘கெஹெல்பத்தர பத்மே’ என்பவரைத் தான் சந்தித்ததாக இஷாரா செவ்வந்தி தெரிவித்துள்ளார்.

கணேமுல்ல சஞ்சீவ கொலையின் சூத்திரதாரி எனக் கூறப்படும் சமிந்து தில்ஷான் பியுமங்க என்பவரை ‘பத்மே’ தனக்கு அறிமுகப்படுத்தியதாகவும் இஷாரா கூறியுள்ளார்.

“எப்படியாவது அவனை வைத்து வேலையை முடித்துக்கொள்” என்று ‘பத்மே’ தன்னிடம் கூறியதாகவும், அதன்படி சமிந்து தில்ஷானுடன் நெருக்கமான உறவை ஏற்படுத்தி, கொலையைச் செய்யுமாறு தான் அவரைத் தூண்டியதாகவும் இஷாரா செவ்வந்தி அதிகாரிகளிடம் வெளிப்படுத்தியுள்ளார்.

இந்தக் கொலைச் சம்பவத்திற்காக தான் எந்தவித பணமும் பெறவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே,இஷாரா செவ்வந்தி மறைந்திருக்க உதவிய குற்றச்சாட்டின் பேரில், நேற்று (17) பொலிஸ் அதிகாரி உள்ளிட்ட மூன்று பேரை கொழும்பு குற்றப் பிரிவு கைது செய்துள்ளது.

கணேமுல்ல சஞ்சீவ கொலைக்குப் பிறகு, குறித்த பொலிஸ் கான்ஸ்டபிளின் மனைவியின் தாயார் தங்கியிருந்த வீட்டில் இஷாரா செவ்வந்தி ஒன்றரை நாட்கள் மறைந்திருந்தமை விசாரணையில் தெரியவந்துள்ளது.

விசாரணைக் குழு ஒன்று இஷாரா செவ்வந்தியுடன் நேற்று தொட்டங்கொட பகுதிக்குச் சென்று, அங்கு அவருக்கு அடைக்கலம் கொடுத்த வேறொரு நபரையும் கைது செய்தது.கணேமுல்ல சஞ்சீவ கொலையின் பின்னர் தப்பிச் சென்ற இஷாரா செவ்வந்தி, அந்த நபரின் வீட்டில் சுமார் ஒன்றரை மாதங்கள் தங்கியிருந்ததாக தெரியவந்துள்ளது.கைது செய்யப்பட்ட அந்த நபர், தற்போது வெளிநாட்டில் இருக்கும் ‘மத்துகம ஷான்’ எனப்படும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியின் பாடசாலை நண்பர் என்றும் தெரியவந்துள்ளது.

You may also like

செய்தி

‘கிளீன் ஸ்ரீ லங்கா’வின் கீழ் 34 புதிய திட்டங்கள்

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் அறிவுறுத்தல்களின்படி, அரசாங்கத்தின் பிரதான திட்டமாக செயற்படுத்தப்படும் “கிளீன் ஸ்ரீலங்கா” திட்டத்தின் கீழ், இந்த ஆண்டு 34 புதிய திட்டங்களை செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
செய்தி

ஐரோப்பாவில் புதிய வைரஸ்:நாடுகளின் எல்லைகள் மூடல்

மத்திய ஐரோப்பிய நாடான ஹங்கேரியில் உள்ள கால்நடை பண்ணையில் கால் மற்றும் வாய் நோய் முதலில் பரவியதாக தகவல் வெளியானது. இதை தடுக்க ஆயிரக்கணக்கான கால்நடைகள் கொல்லப்பட்டுள்ளன.