தங்காலையில் சிக்கிய மற்றுமொரு ஐஸ் லொறி
தங்காலை பகுதியில் சுமார் இருநூறு கிலோ கிராம் எடையுடைய போதைப் பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன. பாரிய அளவில் போதைப்பொருள் கடத்திய லொறி ஒன்றை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்
தங்காலை பகுதியில் சுமார் இருநூறு கிலோ கிராம் எடையுடைய போதைப் பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன. பாரிய அளவில் போதைப்பொருள் கடத்திய லொறி ஒன்றை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்
ஊரெழுப்பு பகுதியில் நீண்ட நாட்களாக ஐஸ் பாவனையில் ஈடுபட்டு வந்த 27 வயது இளைஞன் பாவனைக்காக வைத்திருந்த பொருட்களுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
பொலனறுவையில் தொடருந்தில் மோதி வயோதிபர் ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் கத்துருவெல தொடருந்து நிலையத்துக்கு அருகில் இடம்பெற்றுள்ளது.
திஸ்ஸமஹாராமை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட சந்துங்கம பிரகதி மாவத்தை பகுதியில் கால்வாயிலிருந்து ஆணின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக திஸ்ஸமஹாராமை பொலிஸார் தெரிவித்தனர்.
பிம்புர பிரதேசத்தில் உள்ள வீடொன்றின் பின்புறத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளை திருடிச் சென்ற மாணவன் அயகம பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கொழும்பு, புறக்கோட்டையில் உள்ள ஒரு ஹோட்டல் கழிப்பறையில் உள்ள குப்பைத் தொட்டியில் இருந்து 17 தோட்டாக்கள் கண்டெடுக்கப்பட்டதாக புறக்கோட்டை பொலிஸார் தெரிவித்தனர்.
ஸ்ரீ தலதா மாளிகையைச் சுற்றியுள்ள பாதுகாப்பு வலயத்தை அனுமதியின்றி படம்பிடித்த சீனப் பிரஜை ஒருவரை ஸ்ரீ தலதா மாளிகை காவல் நிலைய அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
வெலிகம, தெனிபிட்டிய பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் தெனிபிட்டிய, நிடங்கல பகுதியைச் சேர்ந்த 33 வயதுடைய பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
முகத்துவாரம் பிரதேசத்தில் உள்ள வீடொன்றுக்குள் நுழைந்த இனந்தெரியாத இருவர், வயோதிப தம்பதியை கூரிய ஆயுதங்களால் தாக்கி காயப்படுத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.
யாழ்ப்பாணம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கலட்டிச் சந்தியில் இன்று காலை நடத்தப்பட்ட வாள்வெட்டுத் தாக்குதலில் ஒருவர் காயமடைந்துள்ளார்.