செய்தி

அனுமதியின்றி படம் பிடித்த சீனப் பிரஜை கைது

ஸ்ரீ தலதா மாளிகையைச் சுற்றியுள்ள உயர் பாதுகாப்பு வலயத்தை அனுமதியின்றி ட்ரோன் மூலம் படம்பிடித்த சீனப் பிரஜை ஒருவரை ஸ்ரீ தலதா மாளிகை காவல் நிலைய அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

நேற்று இரவு (15) சுமார் 7.00 மணியளவில் தியவடன நிலமேவின் உத்தியோகபூர்வ இல்லத்திற்கு அருகிலிருந்து 48 வயதான சீனப் பிரஜை இந்தக் காணொளியை எடுத்ததாகக் காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

ஸ்ரீ தலதா மாளிகையின் மீது பறந்து கொண்டிருந்த ட்ரோன், ஜாமர் கருவிகளைப் பயன்படுத்தி விமானப்படையினரால் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளது.

கைதான சீனப் பிரஜையையும், ட்ரோனையும் மேலதிக விசாரணைக்காக கண்டி சுற்றுலா காவல் பிரிவிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுத்துள்ளனர்.

You may also like

செய்தி

‘கிளீன் ஸ்ரீ லங்கா’வின் கீழ் 34 புதிய திட்டங்கள்

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் அறிவுறுத்தல்களின்படி, அரசாங்கத்தின் பிரதான திட்டமாக செயற்படுத்தப்படும் “கிளீன் ஸ்ரீலங்கா” திட்டத்தின் கீழ், இந்த ஆண்டு 34 புதிய திட்டங்களை செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
செய்தி

ஐரோப்பாவில் புதிய வைரஸ்:நாடுகளின் எல்லைகள் மூடல்

மத்திய ஐரோப்பிய நாடான ஹங்கேரியில் உள்ள கால்நடை பண்ணையில் கால் மற்றும் வாய் நோய் முதலில் பரவியதாக தகவல் வெளியானது. இதை தடுக்க ஆயிரக்கணக்கான கால்நடைகள் கொல்லப்பட்டுள்ளன.