செய்தி

கொழும்பு ஹோட்டல் கழிப்பறையில் தோட்டாக்கள்

கொழும்பு, புறக்கோட்டையில் உள்ள ஒரு ஹோட்டல் கழிப்பறையில் உள்ள குப்பைத் தொட்டியில் இருந்து 17 தோட்டாக்கள் கண்டெடுக்கப்பட்டதாக புறக்கோட்டை பொலிஸார் தெரிவித்தனர்.

கழிப்பறையை சுத்தம் செய்யச் சென்றபோது குப்பைத் தொட்டியில் துப்பாக்கி தோட்டாக்கள் இருப்பதைக் கண்ட ஊழியர்கள் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.

குறித்த இடத்திற்கு சென்ற பொலிஸார் தோட்டாக்களை கைப்பற்றியுள்ளதுடன் இது தொடர்பான பரிசோதனையில் 9MM வகை தோட்டாக்கள் என கண்டறியப்பட்டுள்ளது.

யார் கழிப்பறைக்குள் நுழைந்து குப்பைத் தொட்டியில் தோட்டாக்களை கொட்டியிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர். மேலும் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை புறக்கோட்டை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

You may also like

செய்தி

‘கிளீன் ஸ்ரீ லங்கா’வின் கீழ் 34 புதிய திட்டங்கள்

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் அறிவுறுத்தல்களின்படி, அரசாங்கத்தின் பிரதான திட்டமாக செயற்படுத்தப்படும் “கிளீன் ஸ்ரீலங்கா” திட்டத்தின் கீழ், இந்த ஆண்டு 34 புதிய திட்டங்களை செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
செய்தி

ஐரோப்பாவில் புதிய வைரஸ்:நாடுகளின் எல்லைகள் மூடல்

மத்திய ஐரோப்பிய நாடான ஹங்கேரியில் உள்ள கால்நடை பண்ணையில் கால் மற்றும் வாய் நோய் முதலில் பரவியதாக தகவல் வெளியானது. இதை தடுக்க ஆயிரக்கணக்கான கால்நடைகள் கொல்லப்பட்டுள்ளன.