வெலிகம, தெனிபிட்டிய பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
வெலிகமவிலிருந்து அக்குரஸ்ஸ நோக்கிச் சென்ற லொறி, எதிர் திசையில் வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியதில் மோட்டார் சைக்கிளை செலுத்தி சென்றவர் பலத்த காயங்களுடன் வலானை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்தவர் தெனிபிட்டிய, நிடங்கல பகுதியைச் சேர்ந்த 33 வயதுடைய பெண் எனத் தெரியவந்துள்ளது. விபத்துடன் தொடர்புடைய லொறியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வெலிகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

