செய்தி

மோட்டார் சைக்கிளை திருடிச் சென்ற மாணவன் கைது

இரத்தினபுரி, அயகம, பிம்புர பிரதேசத்தில் உள்ள வீடொன்றின் பின்புறத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளை திருடிச் சென்ற பாடசாலை மாணவன் ஒருவன் அயகம பொலிஸாரால் நேற்று  (17.09.2025) கைது செய்யப்பட்டுள்ளார்.

அயகம பொலிஸாருக்கு கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் அயகம பிரதேசத்தில் உள்ள தேவாலயம் ஒன்றுக்கு அருகில் வைத்து, திருடப்பட்ட மோட்டார் சைக்கிளுடன் பாடசாலை மாணவன் கைது செய்யப்பட்டுள்ளார்.

15 வயதுடைய பாடசாலை மாணவனே கைது செய்யப்பட்டுள்ளார்.

மோட்டார் சைக்கிள் ஓட்டும் ஆசையில் வீடொன்றின் பின்புறத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளை திருடியதாக பாடசாலை மாணவன் பொலிஸாரிடம் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.

கைது செய்யப்பட்ட பாடசாலை மாணவனை நீதிமன்றில் ஆஜர்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை அயகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

You may also like

செய்தி

‘கிளீன் ஸ்ரீ லங்கா’வின் கீழ் 34 புதிய திட்டங்கள்

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் அறிவுறுத்தல்களின்படி, அரசாங்கத்தின் பிரதான திட்டமாக செயற்படுத்தப்படும் “கிளீன் ஸ்ரீலங்கா” திட்டத்தின் கீழ், இந்த ஆண்டு 34 புதிய திட்டங்களை செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
செய்தி

ஐரோப்பாவில் புதிய வைரஸ்:நாடுகளின் எல்லைகள் மூடல்

மத்திய ஐரோப்பிய நாடான ஹங்கேரியில் உள்ள கால்நடை பண்ணையில் கால் மற்றும் வாய் நோய் முதலில் பரவியதாக தகவல் வெளியானது. இதை தடுக்க ஆயிரக்கணக்கான கால்நடைகள் கொல்லப்பட்டுள்ளன.