செய்தி

ஐஸ் மற்றும் போதை மாத்திரைகளுடன் இளைஞன் கைது

கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஊரெழுப்பு பகுதியில் நீண்ட நாட்களாக ஐஸ் பாவனையில் ஈடுபட்டு வந்த 27 வயது இளைஞன் பாவனைக்காக வைத்திருந்த பொருட்களுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த கைது நடவடிக்கை நேற்றையதினம்(21.09.2025) இடம்பெற்றுள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடமிருந்து 3600 மில்லிகிராம் ஐஸ் மற்றும் போதை மாத்திரைகள், அதனைப் பயன்படுத்தும் உபகரணங்கள் என்பனவும் கைப்பற்றப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்ட சந்தேகநபரையும் சான்று பொருட்களையும் நீதிமன்றத்தில் முற்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

மேலதிக விசாரணைகளை கோப்பாய் பொலிஸார் முன்னெடுத்து வருவதும் குறிப்பிடத்தக்கது. 

You may also like

செய்தி

‘கிளீன் ஸ்ரீ லங்கா’வின் கீழ் 34 புதிய திட்டங்கள்

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் அறிவுறுத்தல்களின்படி, அரசாங்கத்தின் பிரதான திட்டமாக செயற்படுத்தப்படும் “கிளீன் ஸ்ரீலங்கா” திட்டத்தின் கீழ், இந்த ஆண்டு 34 புதிய திட்டங்களை செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
செய்தி

ஐரோப்பாவில் புதிய வைரஸ்:நாடுகளின் எல்லைகள் மூடல்

மத்திய ஐரோப்பிய நாடான ஹங்கேரியில் உள்ள கால்நடை பண்ணையில் கால் மற்றும் வாய் நோய் முதலில் பரவியதாக தகவல் வெளியானது. இதை தடுக்க ஆயிரக்கணக்கான கால்நடைகள் கொல்லப்பட்டுள்ளன.