செய்தி

சட்டவிரோதமாக ஐரோப்பா சென்ற இலங்கையர்கள் சுடப்பட்டு உயிரிழப்பு

சட்டவிரோதமாக ஐரோப்பா சென்ற இலங்கையர் இருவர், துப்பாக்கிச் சூடு நடாத்தப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளனர்.

கிளிநொச்சி உருத்திரபுரத்தைச் சேர்ந்த சமுர்த்தி உத்தியோகத்தர் ஆட்கடத்தல் காரர்கள் மூலம் சட்டவிரோதமாக வெளிநாடு சென்ற நிலையில், கடந்த 30 ஆம் திகதி பெலாரஸ் எல்லையில் அந்நாட்டு இராணுவத்தினரால் சுடப்பட்டு உயிரிழந்துள்ளார்.

இதன்போது, அவருடன் இருந்த மற்றுமொரு இலங்கையரும் சுட்டுக் கொல்லப்பட்டதாக அந் நாட்டு தகவல்கள் தெரிவித்துள்ளன.குறித்த இருவரும் பெலாரஸ் நாட்டின் எல்லைப் பகுதியில் உள்ள அடர்காட்டுப் பகுதியில் விலங்குகள் நுழையும் பகுதிக்குள்ளால் மற்றுமொரு நாட்டுக்குள் நுழைய முயற்சித்துள்ளனர்.இதன்போது, பெலாரஸ் இராணுவத்தினரால் அவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.

You may also like

செய்தி

‘கிளீன் ஸ்ரீ லங்கா’வின் கீழ் 34 புதிய திட்டங்கள்

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் அறிவுறுத்தல்களின்படி, அரசாங்கத்தின் பிரதான திட்டமாக செயற்படுத்தப்படும் “கிளீன் ஸ்ரீலங்கா” திட்டத்தின் கீழ், இந்த ஆண்டு 34 புதிய திட்டங்களை செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
செய்தி

ஐரோப்பாவில் புதிய வைரஸ்:நாடுகளின் எல்லைகள் மூடல்

மத்திய ஐரோப்பிய நாடான ஹங்கேரியில் உள்ள கால்நடை பண்ணையில் கால் மற்றும் வாய் நோய் முதலில் பரவியதாக தகவல் வெளியானது. இதை தடுக்க ஆயிரக்கணக்கான கால்நடைகள் கொல்லப்பட்டுள்ளன.