ஐந்து முறை ஐ.பி.எல். கிண்ணத்தை வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இம்முறை ஏழு போட்டிகளில் விளையாடி இரண்டில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது.இந்நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் எட்டாவது ஆட்டத்தில் மும்பை இந்தியன்சை இன்று இரவு 7.30 மணிக்கு மீண்டும் சந்தித்து வருகிறது.
மும்பை வான்கடே மைதானத்தில் இந்த போட்டி நடக்கிறது. இந்த போட்டிக்கான நாணயச் சுழற்சியில் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி பந்து வீச்சை தேர்வு செய்யவே சென்னை சூப்பர் கிங்ஸ் முதலாவதாக துடுப்பெடுத்தாட களமிறங்கியது.
இந்த ஆட்டத்தின் 20 ஓவர்கள் முடிவில், ஐந்து விக்கெட்கள் வித்தியாசத்தில் 176 ஓட்டங்களை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி எடுத்துள்ளது. இதில் அதிகபட்சமாக ஜடேஜா 53 ஓட்டங்களும் ஷிவம் துபே 50 ஓட்டங்களும் ஆயுஷ் மாத்ரே 32 ஓட்டங்களும் எடுத்தனர்.
இதைத் தொடர்ந்து, 177 ஓட்டங்கள் என்கிற வெற்றி இலக்குடன் களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணி, சென்னை அணியை வீழ்த்தி வெற்றியை பதிவு செய்தது.

