மக்கள் நீதி மையம் தலைவர் கமல்ஹாசன் திமுகவைச் சேர்ந்த ராஜாத்தி(கவிஞர் சல்மா) எஸ்.ஆர். சிவலிங்கம் பி.வில்சன்ஆகியோர் இன்று மாநிலங்களவை உறுப்பினர்களாக பதவியேற்றனர்.
மட்டக்களப்பு குருக்கள் மடம் பறவைகள் சரணாலயத்தின் தீச்சம்பவம் பதிவாகியுள்ளது. பறவைகள் சரணாலயத்திற்கு இலட்ச கணக்கிலான பறவைகள் வருகை தருகின்றமை குறிப்பிடத்தக்கது.
எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் தீ விபத்து காரணமாக ஏற்பட்ட பாதிப்புக்காக ஒரு பில்லியன் அமெரிக்க டொலரை ஆரம்ப நட்டஈடாக செலுத்துமாறு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படும் உதவித் தொகையை எதிர்காலத்தில் 7500 /-அதிகரிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் தெரிவித்துள்ளார்.
உலக சந்தையில் உர விலைகள் அதிகரித்துள்ளதாகவும், அதனால் உர விலையில் சில அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், தேசிய உரச் செயலகத்தின் பணிப்பாளர் லொக்குஹேவகே தெரிவித்தார்.
அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த அரசியல்வாதியும் நீண்டகால நாடாளுமன்ற உறுப்பினராகவும் இருந்த மூத்த அமைச்சர் பி.தயாரத்ன காலமானார் இறக்கும் போது அவருக்கு வயது 89 ஆகும்
மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலயத்தில் இருந்து ஸ்ரீ முருகப்பெருமான் வள்ளி தெய்வயானை சமேதரராக எழுந்தருளி புனித தீர்த்தத்தில் தீர்த்தத் திருவிழா சிறப்பாக இடம்பெற்றது.
கந்தசுவாமி ஆலய வருடாந்திர மகோற்சபத்தை முன்னிட்டு ஆலய வெளி வீதியினை சுற்றி சிவப்பு, வெள்ளை துணிகள் கட்டப்பட்டு, திருவிழாவிற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.
இலங்கையின் சுற்றுலாத் துறையை வளர்க்கும் நோக்கில் மேலும் 40 நாடுகளுக்கான விசா கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரசாங்கம் முடிவு செய்துள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.