அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த மூத்த அரசியல்வாதியும் நீண்டகால நாடாளுமன்ற உறுப்பினராகவும் இருந்த முன்னாள் அமைச்சர் பி.தயாரத்ன காலமானார்.இறக்கும் போது அவருக்கு வயது 89 ஆகும்.
1936 ஒக்டோபர் 1 ஆம் திகதி பிறந்த அவர், இலங்கை அரசியலில் ஒரு முக்கிய நபராக இருந்தார்.

அவர் முதன்முதலில் 1977 ஆம் ஆண்டு ஐக்கிய தேசியக் கட்சியின் (UNP) கீழ் அம்பாறை தொகுதியைப் பிரதிநிதித்துவப்படுத்தி நாடாளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.
அவர் 2001 முதல் 2004 வரை சுகாதாரம், ஊட்டச்சத்து மற்றும் நலன்புரி அமைச்சராகப் பணியாற்றினார்.

