செய்தி

இலங்கைக்கு கிடைக்கவுள்ள ஒரு பில்லியன் டொலர்

எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் தீ விபத்து காரணமாக ஏற்பட்ட பாதிப்புக்காக ஒரு வருடத்தினுள் ஒரு பில்லியன் அமெரிக்க டொலரை ஆரம்ப நட்டஈடாக செலுத்துமாறு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த நட்டஈட்டு தொகை திறைசேரியின் செயலாளருக்கு செலுத்தப்பட வேண்டும் என நீதிமன்றம் தமது உத்தரவில் தெரிவித்துள்ளது.

பிரதம நீதியரசர் முர்து பெர்னாண்டோ, நீதியரசர்களான யசந்த கோதாகொட, ஷிரான் குணரத்ன, அச்சல வெங்கம்புலி மற்றும் பிரியந்த பெர்னாண்டோ ஆகிய ஐவரடங்கிய நீதியரசர்கள் ஆயம்,

ஓய்வுபெற்ற நீதியரசர் காமினி அமரசேகர தலைமையில் எக்ஸ்பிரஸ் பேர்ள் நட்டஈடு ஆணைக்குழுவொன்றையும் ஸ்தாபிக்க உத்தரவிட்டது.

நகர அபிவிருத்தி மற்றும் கடற்பாதுகாப்பு தொடர்பான முன்னாள் இராஜாங்க அமைச்சர் நாலக்க கொடஹேவா, கண்காணிப்பு நடவடிக்கைகளை எடுக்க தவறியுள்ளமை மற்றும் அதனூடாக குடிமக்களின் அடிப்படை உரிமைகள் மீறப்பட்டுள்ளமை தொடர்பில் பொறுப்புகூறவேண்டும் எனவும் உயர்நீதிமன்ற உத்தரவிட்டுள்ளது.

You may also like

செய்தி

‘கிளீன் ஸ்ரீ லங்கா’வின் கீழ் 34 புதிய திட்டங்கள்

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் அறிவுறுத்தல்களின்படி, அரசாங்கத்தின் பிரதான திட்டமாக செயற்படுத்தப்படும் “கிளீன் ஸ்ரீலங்கா” திட்டத்தின் கீழ், இந்த ஆண்டு 34 புதிய திட்டங்களை செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
செய்தி

ஐரோப்பாவில் புதிய வைரஸ்:நாடுகளின் எல்லைகள் மூடல்

மத்திய ஐரோப்பிய நாடான ஹங்கேரியில் உள்ள கால்நடை பண்ணையில் கால் மற்றும் வாய் நோய் முதலில் பரவியதாக தகவல் வெளியானது. இதை தடுக்க ஆயிரக்கணக்கான கால்நடைகள் கொல்லப்பட்டுள்ளன.