எண்ணெய்யானது உணவின் சுவையை கூட்டுகின்ற அதேவேளை, மனிதனின் ஆரோக்கியத்திற்கு பாரிய தீங்கையும் அது உண்டு பண்ணுகின்றது . அவ்வாறான ஐந்து வகை எண்ணெய்களைப் பற்றி இந்தப் பதிவில் விரிவாகப் பார்ப்போம்.
1) சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய்#Refined oil
அனேகமான மக்கள் சமையலுக்காக பயன்படுத்தும் சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய்(Refined oil)வகைகள் மனித ஆரோக்கியத்திற்கு உகந்ததல்ல. ஏனெனில், இவற்றில் டிரான்ஸ் ஃபேட்டி அசிட்(Trans fatty acids) அதிகமுள்ளதால் இந்த எண்ணெயைப் பயன்படுத்துவதால் உடல் பருமன்(Obesity), உடல் எடை அதிகரிப்பு(Body weight gain), இதய நோய்(Heart Disease), நீரிழிவு நோய்(Diabetes)போன்ற ஆபத்தான நோய்கள் வருவதற்கு வாய்ப்புகள் அதிகம் காணப்படுகிறது.
2) ஹைட்ரஜனேற்றப்பட்ட எண்ணெய்#Hydrogenated oil
ஹைட்ரஜனேற்றப்பட்ட எண்ணெய்(Hydrogenated oil)வகைகளை தயாரிக்க ஹைட்ரஜன் வாயு பயன்படுத்துவதால் அது மனித ஆரோக்கியத்திற்கு தீங்கானது. அதாவது, குறைந்த வெப்ப நிலையிலும் இந்த எண்ணெய் திடமாக இருப்பதோடு, பல தொகுக்கப்பட்ட உணவுப் பொருட்களிலும் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது. இருப்பினும், ஹைட்ரஜனேற்றப்பட்ட எண்ணெய் நம் உடலில் கொழுப்பினை அதிகரிப்பதோடு, இதயம் தொடர்பான நோய்கள் வருவதற்கான வாய்ப்பினையும் அதிகரிப்பதாக சுகாதார நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
- பாம் ஒயில்:
பாம் ஒயிலில் சச்சுரேட்டட் கொழுப்பு அதிகம் இருக்கின்றமையால் இது மனித உடம்பிற்கு நல்லதல்ல. பாம் ஒயில் பயன்படுத்துவதால் இதய நோய் அபாயம் அதிகரிக்கிறது. மேலும், இந்த எண்ணெய் உற்பத்தியை அதிகரிக்க, மனிதர்கள் காடுகளை வெட்டி அழிப்பதால் சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவித்தும் வருகின்றனர். - தாவர எண்ணெய்: தாவர எண்ணெயானது சோயாபீன் எண்ணெய் ,சோள எண்ணெய், சூரியகாந்தி எண்ணெய் போன்ற பல எண்ணெய்களின் கலவையாக இருப்பதால் இது சமையலுக்கு உகந்ததல்ல என்பது நிபுணர்களின் கருத்து. இந்த எண்ணெய்களில் ஒமேகா 6, கொழுப்பு அமிலங்கள் அதிகமாகவும் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் குறைவாகவும் உள்ளன. ஆனால், நமது உடலுக்கு ஒமேகா 6 மற்றும் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்களின் சரியான விகிதம் தேவைப்படுவதால் அவற்றின் ஏற்றத் தாழ்வு காரணமாக, உடல் அழற்சியுடன் பல உடல்நலப் பிரச்னைகளையும் ஏற்படுத்தும்.
- கடலை எண்ணெய்: கடலை எண்ணெயில் நிறைவுற்ற கொழுப்பு அதிகம் இருப்பதால் இது நல்லதல்ல என்பது நிபுணர்களின் கருத்து. மேலும், வேர்க்கடலை எண்ணெய் இதய நோய் அபாயத்தை பெரிதும் அதிகரிப்பதோடு, சில சந்தர்ப்பங்களில் ஒவ்வாமையையும் ஏற்படுத்தும் என சுகாதார நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள்.
மேற்கூறிய ஐந்து வகை எண்ணெய்களும் சமையலுக்கு உகந்ததல்ல என்பது நிபுணர்களின் கருத்தாக இருப்பதால் இவற்றைத் தவிர்த்து பிற எண்ணெய்களை சமையலுக்குப் பயன்படுத்தி உடல் ஆரோக்கியத்தை பேணுங்கள்.

