தகவல்கள்

வாட்ஸ்ஆப்பிற்கு மாற்றாக அமையுமா? அரட்டை ஆப்!

மெசேஜிங் உலகில் புதிய அம்சங்களைக் கொண்டுவராவிட்டாலும், பயனர்களுக்குத் தேவையான அனைத்து அத்தியாவசிய அம்சங்களையும் வழங்குகிறது.

ஜோஹோ (Zoho) நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட ‘அரட்டை’ (Arattai) என்ற புதிய மெசேஜிங் செயலி, இந்தியாவில் திடீரெனப் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

‘அரட்டை’ என்ற தமிழ்ச் சொல்லுக்கு “சாதாரணப் பேச்சு” என்று பொருள். 2021-ஆம் ஆண்டு ஒரு சிறிய திட்டமாக ஜோஹோ இதை அறிமுகம் செய்திருந்தாலும், சமீபத்தில் இதன் வளர்ச்சி அபரிமிதமாக உயர்ந்துள்ளது.

மத்திய கல்வித் துறை அமைச்சர், இந்தியர்கள் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட டிஜிட்டல் தீர்வுகளைப் பயன்படுத்துமாறு வலியுறுத்தியபோது, அரட்டை செயலியைக் குறிப்பிட்டுப் பரிந்துரை செய்திருந்தார்.

அவரது இந்த கருத்து பிரபலம் அடைந்ததை தொடர்ந்து, அரட்டை செயலியை டவுண்லோட் செய்வோரின் எண்ணிக்கையும் அதிகரித்தது.

உலகம் முழுவதும் உளவு மென்பொருள் (Spyware) குறித்த கவலைகள் அதிகரித்து வரும் நிலையில், அரட்டை செயலி “ரகசியத்தன்மைக்கு முன்னுரிமை” (Privacy-first) அளிக்கும் செயலியாக நிலைநிறுத்தப்பட்டுள்ளது.

பயனர்களின் தனிப்பட்ட தகவல்களை தவறான வழியில் பயன்படுத்த மாட்டோம் என்று ஜோஹோ உறுதியளித்திருப்பது இந்தியப் பயனர்களைக் கவர்ந்துள்ளது.

You may also like

தகவல்கள்

25 வயதைக் கடந்துவிட்ட பெண்களுக்காக…

மூன்று முதல் நான்கு பாதாம், பிரேசில் பருப்புகள் மற்றும் அக்ரூட் பருப்புகளை இரவில் ஊற வைக்கவும். காலையில் எழுந்தவுடன் ஒரு கோப்பை தண்ணீருடன் இந்த பருப்புகளை சாப்பிடுங்கள்.
தகவல்கள்

புதிய நிறம் கண்டுபிடிப்பு

மனிதர்கள் இதுவரை பார்த்திராத புதிய நிறத்தை விஞ்ஞானிகள் கண்டுபிடித்திருக்கின்றனர். அறிவியல் உலகில் இது மிகப்பெரிய சாதனையாக பார்க்கப்படுகிறது. இந்த நிறத்தை வெறும் கண்களால் பார்க்க முடியாது என்றும் லேசர்