விளையாட்டு

மகளிர் உலகக் கோப்பை: இங்கிலாந்து அபார வெற்றி

மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணியை வீழ்த்தி இங்கிலாந்து அணி அபார வெற்றி பெற்றுள்ளது.

மகளிருக்கான உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியா மற்றும் இலங்கை  ஆகிய இரு நாடுகளில் நடைபெற்று வருகிறது.

இன்று இலங்கையின் கொழும்பில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் இலங்கை அணியை எதிர்த்து இங்கிலாந்து அணி களமிறங்கியது.

முதலில் துடுப்பெடுத்து ஆடியஇங்கிலாந்து அணி 50 ஓவர்கள் முடிவில் ஒன்பது விக்கெட்டுகளை இழந்து 253 ஓட்டங்கள் குவித்து இலங்கை அணிக்கு இலக்கை நிர்ணயித்தது.இங்கிலாந்து அணியில் நாட் ஸ்கைவர் அதிகபட்சமாக 117 ஓட்டங்கள் குவித்து அசத்தினார்.

254 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்குடன் துடுப்பாட்டத்தில் களமிறங்கிய இலங்கை அணி ஓட்டங்களை குவிக்க தடுமாறியது.அதிகபட்சமாக ஹசினி பெராரா 35 ஓட்டங்களும் ஹர்ஷிதா சமரவிக்ரமா 33 ஓட்டங்களும் குவித்தனர்.

இங்கிலாந்து அணியின் அபார பந்து வீச்சால் இலங்கை அணி 45.4 ஓவர்கள் முடிவிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 164 ஓட்டங்கள் மட்டுமே குவித்து தோல்வியை தழுவியது.இங்கிலாந்து அணி இதன் மூலம் 89 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது.

You may also like

விளையாட்டு

சென். பற்றிக்ஸ் வெற்றிக் கிண்ணத்தை சுவீகரித்தது

யாழ். சென். பற்றிக்ஸ் கல்லூரிக்கும் வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரிக்கும் இடையில் சென். பற்றிக்ஸ் கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற 50 ஓவர் கிரிக்கெட் போட்டியில் ஐந்து விக்கெட்களால் வெற்றிபெற்று
விளையாட்டு

சென்னை சுப்பர் கிங்ஸிடம் வீழ்ந்த லக்னோ சுப்பர் ஜெயண்ட்ஸ்

ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் எகானா கிரிக்கெட் மைதானத்தில் இன்று (14)நடைபெறும் லீக் போட்டியில் மகேந்திர சிங் தோனி தலைமையிலான சென்னை சுப்பர் கிங்ஸ்- ரிஷப் பந்த் தலைமையிலான லக்னோ