செய்தி

கொழும்பு-கட்டுநாயக்க நீர் விமான சேவை ஆரம்பம்

பெய்ரா ஏரியை நீர் விமான நிலையமாகப் (water Aerodrome) பயன்படுத்தி கட்டுநாயக்கவிற்கும் கொழும்பிற்கும் இடையில் பயணிக்கும் விமான சேவை போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்கவின் தலைமையில் இன்று (03) நடைபெற்றது.

சுற்றுலாத் துறையை மேம்படுத்தும் திட்டத்தின் ஒரு படியாகவும், உள்நாட்டு விமானங்களை ஊக்குவிக்கும் திட்டத்தின் மற்றொரு படியாகவும் இந்த கொழும்பு – கட்டுநாயக்க விமான சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

தற்போது இலங்கையில் நீர் விமானப் பயணங்களை மேற்கொள்ளும் சினமன் எயார் லைன்ஸ், இந்த கொழும்பு – கட்டுநாயக்க விமானப் பயணங்களை மேற்கொள்ளும்.

இந்த புதிய விமான சேவையின் ஊடாக, கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வரும் சுற்றுலாப் பயணிகள் மற்றும் வணிகர்கள் குறுகிய காலத்தில் கொழும்பு நகரத்திற்கு விரைவாகவும் வசதியாகவும் பயணிக்கும் வாய்ப்பைப் பெறுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

You may also like

செய்தி

‘கிளீன் ஸ்ரீ லங்கா’வின் கீழ் 34 புதிய திட்டங்கள்

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் அறிவுறுத்தல்களின்படி, அரசாங்கத்தின் பிரதான திட்டமாக செயற்படுத்தப்படும் “கிளீன் ஸ்ரீலங்கா” திட்டத்தின் கீழ், இந்த ஆண்டு 34 புதிய திட்டங்களை செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
செய்தி

ஐரோப்பாவில் புதிய வைரஸ்:நாடுகளின் எல்லைகள் மூடல்

மத்திய ஐரோப்பிய நாடான ஹங்கேரியில் உள்ள கால்நடை பண்ணையில் கால் மற்றும் வாய் நோய் முதலில் பரவியதாக தகவல் வெளியானது. இதை தடுக்க ஆயிரக்கணக்கான கால்நடைகள் கொல்லப்பட்டுள்ளன.