உலக வரலாற்றில் முதல் முறையாக 4 மணித்தியாலங்களுக்கு மேலாக சிர சாசனம் செய்து மட்டக்களப்பில் உள்ள நபர் சோழ உலக சாதனை படைத்துள்ளார்.
60 வயதான மாணிக்கப்போடி குகன்தராஜா என்பவரே இந்த சாதனையை படைத்துள்ளார்.

இவர், மட்டக்களப்பு – கரடியனாறில் உப தபால் சேவை உத்தியோகத்தராக கடமையாற்றி தற்போது ஓய்வு பெற்றுள்ளார்.
இந்நிலையில், தொடர்ச்சியாக 4 மணி நேரமும் 30 நிமிடங்களும் சிர சாசனம் செய்து சாதனை செய்து இருக்கின்றமையை பலரும் பாராட்டி வருகின்றனர்.

