செய்தி

ஐரோப்பாவில் புதிய வைரஸ்:நாடுகளின் எல்லைகள் மூடல்

மத்திய ஐரோப்பிய நாடான ஹங்கேரியில் உள்ள கால்நடை பண்ணையில் கால் மற்றும் வாய் நோய் முதலில் பரவியதாக தகவல் வெளியானது. இதை தடுக்க ஆயிரக்கணக்கான கால்நடைகள் கொல்லப்பட்டுள்ளன. அந்த நாட்டின் அருகில் உள்ள ஸ்லோவேக்கியாவில் 3 பண்ணைகளில் உள்ள கால்நடைகளுக்கு வைரஸ் பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து நோய் பரவலை தடுக்கும் வகையில், இரண்டு நாடுகளின் இடையே உள்ள எல்லைகள் மூடப்பட்டுள்ளன. ஹங்கேரியின் லெவல் நகரில் ஒரு பண்ணையில் நோய் பரவியமை கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, 3,000 மாடுகள் கொல்லப்பட்டுள்ளன.

கால் மற்றும் வாய் நோய் என்பது தொற்றும் வைரஸ் நோய். இது, மாடுகள், ஆடுகள், செம்மறி ஆடுகள், பன்றிகள் உள்ளிட்ட பிளவுபட்ட குளம்புகள் கொண்ட விலங்குகளை பாதிக்கிறது. இந்த நோய் நேரடி தொடர்பு, அசுத்தமான மேற்பரப்புகள் அல்லது காற்று வழியாகவும் வேகமாகப் பரவும். நோயை தடுக்க பண்ணைகளில் மருந்து தெளிப்பு உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை ஹங்கேரி மேற்கொண்டு வருகிறது.ஆஸ்திரியாவுடனான எல்லையை ஹங்கேரி மூடியுள்ளது. எந்த பாதிப்பும் இல்லாத போதும் ஆஸ்திரியா நாடு ஹங்கேரி,ஸ்லோவேக்கியாவுடனான எல்லைகளை மூடியுள்ளது. நோய் பாதிப்புக்கு அஞ்சி செக் குடியரசும் தனது எல்லைகளை மூடியுள்ளது.

You may also like

செய்தி

‘கிளீன் ஸ்ரீ லங்கா’வின் கீழ் 34 புதிய திட்டங்கள்

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் அறிவுறுத்தல்களின்படி, அரசாங்கத்தின் பிரதான திட்டமாக செயற்படுத்தப்படும் “கிளீன் ஸ்ரீலங்கா” திட்டத்தின் கீழ், இந்த ஆண்டு 34 புதிய திட்டங்களை செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
செய்தி

வானிலை தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

வெப்பமான வானிலை குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் (Department of Meteorology) அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. வடக்கு, வடமத்திய, வடமேல், மேற்கு, தெற்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் சில