செய்தி

தொடர்ந்தும் அதிகரித்துள்ள எலுமிச்சையின் விலை

தம்புள்ளை பொருளாதார மையத்தில் தற்போது ஒரு கிலோ எலுமிச்சம் பழத்தின் விலை ரூ.1800 முதல் 2000 வரை விற்பனை செய்யப்படுவதாக தம்புள்ளை வர்த்தக சங்கத்தின் தலைவர் பி.ஏ. சிறிவர்தன தெரிவித்துள்ளார்.

எலுமிச்சம் பழத்தின் அறுவடை குறைந்து, தேவைக்கு ஏற்ப விநியோகத்தை வழங்க முடியாத காரணத்தினால் இவ்வாறு விலை அதிகரித்துள்ளதாக கூறியுள்ளார்.

இதேவேளை, ஒரு கிலோ பூசணிக்காயின் மொத்த விலை ரூ.30 முதல் 60 வரை அதிகரித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், ஒரு கிலோ கத்தரிக்காய் ரூ.230, ஒரு கிலோ பீட்ரூட் ரூ.50-60 வரை, ஒரு கிலோ தக்காளி ரூ.110, ஒரு கிலோ வெண்டைக்காய் ரூ.160 என விற்பனை செய்யப்படுவதாக மேலும் தெரிவித்துள்ளார்.

You may also like

செய்தி

‘கிளீன் ஸ்ரீ லங்கா’வின் கீழ் 34 புதிய திட்டங்கள்

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் அறிவுறுத்தல்களின்படி, அரசாங்கத்தின் பிரதான திட்டமாக செயற்படுத்தப்படும் “கிளீன் ஸ்ரீலங்கா” திட்டத்தின் கீழ், இந்த ஆண்டு 34 புதிய திட்டங்களை செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
செய்தி

ஐரோப்பாவில் புதிய வைரஸ்:நாடுகளின் எல்லைகள் மூடல்

மத்திய ஐரோப்பிய நாடான ஹங்கேரியில் உள்ள கால்நடை பண்ணையில் கால் மற்றும் வாய் நோய் முதலில் பரவியதாக தகவல் வெளியானது. இதை தடுக்க ஆயிரக்கணக்கான கால்நடைகள் கொல்லப்பட்டுள்ளன.