செய்தி

அம்பாறை- சம்மாந்துறையில் மோட்டார் சைக்கிள் மோதி ஒருவர் பலி– இருவர் கைது!

இரண்டு மோட்டார் சைக்கிள்கள் மோதியதில் சிகிச்சை பலனின்றி ஒருவர் மரணமடைந்துள்ளார்.

மற்றைய இருவரும் கைது செய்யப்பட்டு காயம் அடைந்த நிலையில் சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கல்முனை அம்பாறை பிரதான வீதியில் அமைந்துள்ள குவாசி நீதிமன்றத்திற்கு முன்னால் கடந்த (29) திங்கட்கிழமை மாலை வேளையில் நடைபெற்ற வாகன விபத்தில் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வந்த சம்மாந்துறையை சேர்ந்த உதுமாலெப்பை முகம்மட் அன்பர் (வயது 61) என்பவரே இன்று (02) வியாழக்கிழமை மரணமடைந்துள்ளார்.

இவ்விபத்தில் மோட்டார் சைக்கிள் செலுத்திய சாரதி உட்பட்ட இருவர் கைது செய்யப்பட்டு சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

மரணமடைந்தவரின் சடலம் தற்போது சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பாக சம்மாந்துறை நீதிமன்ற நீதிவானின் உத்தரவின் பேரில் திடீர் மரண விசாரணை அதிகாரி ஏ.எச்.அல்-ஜவாஹிர் விசாரணைகளை மேற்கொண்டு வருகிறார்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை சம்மாந்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

You may also like

செய்தி

‘கிளீன் ஸ்ரீ லங்கா’வின் கீழ் 34 புதிய திட்டங்கள்

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் அறிவுறுத்தல்களின்படி, அரசாங்கத்தின் பிரதான திட்டமாக செயற்படுத்தப்படும் “கிளீன் ஸ்ரீலங்கா” திட்டத்தின் கீழ், இந்த ஆண்டு 34 புதிய திட்டங்களை செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
செய்தி

ஐரோப்பாவில் புதிய வைரஸ்:நாடுகளின் எல்லைகள் மூடல்

மத்திய ஐரோப்பிய நாடான ஹங்கேரியில் உள்ள கால்நடை பண்ணையில் கால் மற்றும் வாய் நோய் முதலில் பரவியதாக தகவல் வெளியானது. இதை தடுக்க ஆயிரக்கணக்கான கால்நடைகள் கொல்லப்பட்டுள்ளன.