விளையாட்டு

வெற்றியீட்டியது இலங்கை அணி

இலங்கை மற்றும் சிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான ஒருநாள் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டி நேற்று (29) நடைபெற்றது.

இரண்டு போட்டிகள் கொண்ட இந்தத் தொடரானது ஹராரேவில் பிற்பகல் ஒரு மணிக்கு ஆரம்பமாகியது.

குறித்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற சிம்பாப்வே அணி களத் தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தது.

அதனடிப்படையில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் ஆறு விக்கெட்டுக்களை இழந்து 298 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

குறித்த போட்டியில், இலங்கை அணிசார்பில் பெத்தும் நிசங்க அதிக ஓட்டங்களாக 76 ஓட்டங்களைப் பெற்றுக் கொடுத்தார்.

மேலும், கமிந்து மென்டிஸ் 50 ஓட்டங்களையும் ஜனித் லியனகே ஆட்டமிழக்காமல் 70 ஓட்டங்களையும் பெற்றுக் கொடுத்தனர்.

இதன்படி, 299 ஓட்டங்கள் என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய சிம்பாப்வே அணி 50 ஓவர்கள் நிறைவில் எட்டு விக்கெட்டுக்களை இழந்து 291 ஓட்டங்களைப் பெற்றது.

இதன்படி, ஏழு ஓட்டங்கள் வித்தியாசத்தில் இலங்கை அணி வெற்றியீட்டியுள்ளது.

You may also like

விளையாட்டு

சென். பற்றிக்ஸ் வெற்றிக் கிண்ணத்தை சுவீகரித்தது

யாழ். சென். பற்றிக்ஸ் கல்லூரிக்கும் வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரிக்கும் இடையில் சென். பற்றிக்ஸ் கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற 50 ஓவர் கிரிக்கெட் போட்டியில் ஐந்து விக்கெட்களால் வெற்றிபெற்று
விளையாட்டு

சென்னை சுப்பர் கிங்ஸிடம் வீழ்ந்த லக்னோ சுப்பர் ஜெயண்ட்ஸ்

ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் எகானா கிரிக்கெட் மைதானத்தில் இன்று (14)நடைபெறும் லீக் போட்டியில் மகேந்திர சிங் தோனி தலைமையிலான சென்னை சுப்பர் கிங்ஸ்- ரிஷப் பந்த் தலைமையிலான லக்னோ