செய்தி

தம்பிலுவில் மயான அகழ்வுப்பணி இடைநிறுத்தம்

திருக்கோவில் காவல்துறை பிரிவுக்குட்பட்ட தம்பிலுவில் மயானத்தை அண்மித்த பகுதிகளில், கருணா குழுவின் முக்கியஸ்தரான இனிய பாரதியின் சகா வழங்கிய வாக்குமூலத்தின் அடிப்படையில்; இரண்டாம் கட்ட அகழ்வுப் பணிகள் நேற்று(29) மதியம் இரண்டாவது நாளாகவும் முன்னெடுக்கப்பட்டன.

அக்கரைப்பற்று மேலதிக நீதிவான் முன்னிலையில், மூன்று ஜே.சி.பி. இயந்திரங்கள் மூலம் அடையாளம் காணப்பட்ட இடங்கள் தோண்டப்பட்டன.

2005ஆம் ஆண்டு காலப்பகுதியில், காரைதீவைச் சேர்ந்த சந்தேகநபர் ஒருவர், தனியார் தொலைத்தொடர்பு சிம் விற்பனை முகவரான அருளானந்தன் சீலனை கடத்தி படுகொலை செய்து இப்பகுதியில் புதைத்ததாக அரச சாட்சியாக மாறி வாக்குமூலம் அளித்திருந்தார்.

வியாழக்கிழமை (28) மாலை தொடங்கிய முதல் நாள் அகழ்வுப் பணிகளில் எவ்வித சான்றுகளும் கிடைக்காததால், நீதவான் உத்தரவின் பேரில் நேற்று(29) இரண்டாவது நாள் அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்பட்டன.

இருப்பினும், இரண்டாவது நாளிலும் எவ்வித சான்றுகளும் கிடைக்கவில்லை. இதனால், அகழ்வுப் பணிகள் இடைநிறுத்தப்பட்டு, நீதிவானின் உத்தரவின்படி நிறைவு செய்யப்பட்டன.

மூன்றாவது நாள் பணிகள் நாளை தொடருமா என்பது இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை.

You may also like

செய்தி

‘கிளீன் ஸ்ரீ லங்கா’வின் கீழ் 34 புதிய திட்டங்கள்

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் அறிவுறுத்தல்களின்படி, அரசாங்கத்தின் பிரதான திட்டமாக செயற்படுத்தப்படும் “கிளீன் ஸ்ரீலங்கா” திட்டத்தின் கீழ், இந்த ஆண்டு 34 புதிய திட்டங்களை செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
செய்தி

ஐரோப்பாவில் புதிய வைரஸ்:நாடுகளின் எல்லைகள் மூடல்

மத்திய ஐரோப்பிய நாடான ஹங்கேரியில் உள்ள கால்நடை பண்ணையில் கால் மற்றும் வாய் நோய் முதலில் பரவியதாக தகவல் வெளியானது. இதை தடுக்க ஆயிரக்கணக்கான கால்நடைகள் கொல்லப்பட்டுள்ளன.