செய்தி

பாணந்துறையில் துப்பாக்கிச் சூடு

பாணந்துறை பிரதேசத்தில் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவமொன்று நடைபெற்றுள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர்.

பாணந்துறை , வந்துரமுல்லை, அலுபோகஹவத்த பிரதேசத்திலேயே நேற்று (27) மாலை குறித்த துப்பாக்கிச்சூட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

அப்பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் இருந்த நபரொருவரை இலக்கு வைத்து மர்ம நபர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.

சம்பவத்தில் காயமடைந்த ஒருவர் உயிரிழந்துள்ளார். துப்பாக்கிச் சூட்டை நடத்திய மர்ம நபர்கள் மோட்டார் சைக்கிள் ஒன்றில் தப்பித்துச் சென்றுள்ளனர்.  

You may also like

செய்தி

‘கிளீன் ஸ்ரீ லங்கா’வின் கீழ் 34 புதிய திட்டங்கள்

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் அறிவுறுத்தல்களின்படி, அரசாங்கத்தின் பிரதான திட்டமாக செயற்படுத்தப்படும் “கிளீன் ஸ்ரீலங்கா” திட்டத்தின் கீழ், இந்த ஆண்டு 34 புதிய திட்டங்களை செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
செய்தி

ஐரோப்பாவில் புதிய வைரஸ்:நாடுகளின் எல்லைகள் மூடல்

மத்திய ஐரோப்பிய நாடான ஹங்கேரியில் உள்ள கால்நடை பண்ணையில் கால் மற்றும் வாய் நோய் முதலில் பரவியதாக தகவல் வெளியானது. இதை தடுக்க ஆயிரக்கணக்கான கால்நடைகள் கொல்லப்பட்டுள்ளன.