செய்தி

கந்தளாயில் காணி ஒன்றில் கைக்குண்டு மீட்பு!

கந்தளாய், 91ஆம் கட்டை பகுதியில் நீண்ட காலமாகப் பாழடைந்திருந்த காணி ஒன்றில், இன்று (28)கைக்குண்டு ஒன்று மீட்கப்பட்டுள்ளது.

கந்தளாய் பொலிசாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், அவர்கள் அந்தக் காணியை ஆய்வு செய்தபோது, அங்கு 87-ஜி (87-G) ரக கைக்குண்டு ஒன்று கண்டறியப்பட்டுள்ளது.

கடந்த 15 ஆண்டுகளாகப் பாழடைந்து கிடந்த இந்தக் காணியை சுத்தம் செய்துகொண்டிருந்த அயல் வீட்டு பெண் ஒருவர், முதலில் இந்தக் குண்டைக் கண்டுள்ளார்.

உடனடியாக அவர் அருகிலிருந்த ஒருவருக்குத் தகவல் தெரிவிக்க, அதன் பிறகு கந்தளாய் பொலிசாருக்கு தகவல் வழங்கப்பட்டது.

சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற பொலிசார் , கைக்குண்டை அகற்றப்படும் வரை அப்பகுதிக்கு பாதுகாப்பு வழங்கியுள்ளதுடன் கைக்குண்டை மீட்கப்பட்டுள்ளனர்.

இது தொடர்பாக மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.

You may also like

செய்தி

‘கிளீன் ஸ்ரீ லங்கா’வின் கீழ் 34 புதிய திட்டங்கள்

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் அறிவுறுத்தல்களின்படி, அரசாங்கத்தின் பிரதான திட்டமாக செயற்படுத்தப்படும் “கிளீன் ஸ்ரீலங்கா” திட்டத்தின் கீழ், இந்த ஆண்டு 34 புதிய திட்டங்களை செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
செய்தி

ஐரோப்பாவில் புதிய வைரஸ்:நாடுகளின் எல்லைகள் மூடல்

மத்திய ஐரோப்பிய நாடான ஹங்கேரியில் உள்ள கால்நடை பண்ணையில் கால் மற்றும் வாய் நோய் முதலில் பரவியதாக தகவல் வெளியானது. இதை தடுக்க ஆயிரக்கணக்கான கால்நடைகள் கொல்லப்பட்டுள்ளன.