செய்தி

மகிந்த சமரசிங்கவுக்கு முக்கிய அமைச்சுப் பதவி

முன்னாள் அமைச்சரும், அமெரிக்காவுக்கான இலங்கைத் தூதுவருமான மகிந்த சமரசிங்க தேசியப் பட்டியல் மூலம் விரைவில் நாடாளுமன்ற உறுப்பினராக பதவியேற்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

தேசிய மக்கள் சக்தியின் தேசியப் பட்டியல் ஊடாக அவரை நாடாளுமன்ற உறுப்பினர் ஆக்குவதற்கு அக்கட்சியின் உயர்பீடம் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

முன்னாள் பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சரும், தற்போதைய நிதியமைச்சின் செயலாளருமான கலாநிதி ஹர்ஷண பதவி விலகியதன் மூலம் ஏற்பட்ட தேசியப்பட்டியல் வெற்றிடத்துக்கே மஹிந்த சமரசிங்க நியமிக்கப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

இலங்கையின் ஏற்றுமதிப் பொருட்கள் மீது அமெரிக்கா விதித்த 44வீத தீர்வை வரியை 30 வீதமாகவும் பின்னர் 20வீதமாகவும் குறைத்துக் கொள்வதில் மஹிந்த சமரசிங்க வழங்கிய பங்களிப்பின் காரணமாகவே அவரை தேசியப்பட்டியல் ஊடாக நாடாளுமன்றம் அழைத்து வர தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்ட பின்னர் அவருக்கு முக்கிய அமைச்சுப் பதவியொன்றும் வழங்கப்படவுள்ளதாக அரசியல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. 

You may also like

செய்தி

‘கிளீன் ஸ்ரீ லங்கா’வின் கீழ் 34 புதிய திட்டங்கள்

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் அறிவுறுத்தல்களின்படி, அரசாங்கத்தின் பிரதான திட்டமாக செயற்படுத்தப்படும் “கிளீன் ஸ்ரீலங்கா” திட்டத்தின் கீழ், இந்த ஆண்டு 34 புதிய திட்டங்களை செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
செய்தி

ஐரோப்பாவில் புதிய வைரஸ்:நாடுகளின் எல்லைகள் மூடல்

மத்திய ஐரோப்பிய நாடான ஹங்கேரியில் உள்ள கால்நடை பண்ணையில் கால் மற்றும் வாய் நோய் முதலில் பரவியதாக தகவல் வெளியானது. இதை தடுக்க ஆயிரக்கணக்கான கால்நடைகள் கொல்லப்பட்டுள்ளன.