செய்தி

இலங்கையில் பிறப்பு வீதம் பாரிய வீழ்ச்சி!

இளம் தலைமுறையினர் குழந்தை பெறுவதை ஒத்திவைப்பதால், இலங்கையில் பிறப்பு வீதம் கடுமையாகச் சரிந்து வருவதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய நாடுகள் சனத்தொகை நிதியத்தின், 2025 உலக சனத்தொகை அறிக்கையை வெளியிடும் நிகழ்வில் கலந்து கொண்டு கொழும்பு பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் லக்ஷ்மன் திசாநாயக்க இதனைத் தெரிவித்தார்.

இளம் தம்பதிகள் அதிக குழந்தைகளைப் பெற விரும்பினாலும், நிதி உறுதியற்ற தன்மை, தொழில் பாதுகாப்பின்மை மற்றும் அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவுகள் அவர்களை ஊக்கப்படுத்துவதில்லை.

இது நாட்டை ஒரு “கருவுறாமை பொறிக்குள்” தள்ளுகிறது என்று அவர் குறிப்பிட்டார்.

ஐக்கிய நாடுகள் சனத்தொகை நிதியத்தின் தரவுகளின்படி, தேசிய கருவுறுதல் வீதம் தற்போது ஒரு பெண்ணுக்கு 1.9 குழந்தை என்ற விகிதத்தில், முந்தையை நிலைக்கும் குறைவாக உள்ளது என சுட்டிக் காட்டியுள்ளார்.  

You may also like

செய்தி

‘கிளீன் ஸ்ரீ லங்கா’வின் கீழ் 34 புதிய திட்டங்கள்

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் அறிவுறுத்தல்களின்படி, அரசாங்கத்தின் பிரதான திட்டமாக செயற்படுத்தப்படும் “கிளீன் ஸ்ரீலங்கா” திட்டத்தின் கீழ், இந்த ஆண்டு 34 புதிய திட்டங்களை செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
செய்தி

ஐரோப்பாவில் புதிய வைரஸ்:நாடுகளின் எல்லைகள் மூடல்

மத்திய ஐரோப்பிய நாடான ஹங்கேரியில் உள்ள கால்நடை பண்ணையில் கால் மற்றும் வாய் நோய் முதலில் பரவியதாக தகவல் வெளியானது. இதை தடுக்க ஆயிரக்கணக்கான கால்நடைகள் கொல்லப்பட்டுள்ளன.