தமிழ் சினிமாவில் தலைசிறந்த இயக்குநர்களில் ஒருவர் ராம். கற்றது தமிழ், தங்க மீன்கள், தரமணி, பேரன்பு என தரமான திரைப்படங்களை தமிழ் சினிமாவிற்கு கொடுத்துள்ளார்.
இவர் இயக்கத்தில் ஐந்தாவதாக உருவாகி கடந்த மாதம் வெளிவந்த திரைப்படம் பறந்து போ. இப்படத்தில் சிவா ஹீரோவாக நடித்திருந்தார்.
ராம் இயக்கத்தில் சிவா முதல் முறையாக இப்படத்தில்தான் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

பறந்து போ திரைப்படத்தின் மூலம் மலையாள நடிகையான கிரேஸ் ஆண்டனி தமிழில் அறிமுகமாகியுள்ளார். அவருடைய வரவும் நல்வரவாகவே அமைந்துள்ளது. மேலும் இப்படத்தில் அஞ்சலி, அஜூ வர்கீஸ், விஜய் யேசுதாஸ் ஆகியோர் நடித்திருந்தனர்.
மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றுள்ள இப்படம் இதுவரை 11 நாட்களை பாக்ஸ் ஆபிசில் கடந்துள்ளது. இந்த நிலையில், பறந்து போ திரைப்படம் உலகளவில் இதுவரை ரூ. 9 கோடி வசூல் செய்துள்ளது. இனி வரும் நாட்களில் இப்படத்திற்கான வசூல் எப்படி இருக்கும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

