செய்தி

மதுபான விலைகளில் ஏற்படவுள்ள திடீர் உயர்வு

உள்நாட்டுச் சீனி உற்பத்தி நிறுவனங்கள் உற்பத்தி செலவை ஈடுசெய்ய எத்தனோல் விலையை உயர்த்தியுள்ளதால் மதுபானங்களின் விலை அதிகரிக்கக் கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒரு லீட்டர் எத்தனோல் ரூ. 475 மற்றும் 500 வரை உள்நாட்டுச் சீனி உற்பத்தி நிறுவனங்கள் விற்று வந்த நிலையில் தற்போது ஒரு லீட்டரின் விலையை ரூ. 800 ஆக உயர்த்தியுள்ளன.

நாட்டில் 4 உள்நாட்டுச் சீனி உற்பத்தி நிறுவனங்கள் இருப்பதோடு, பெலவத்தை மற்றும் செவனகல தொழிற்சாலைகளை அரசுக்குச் சொந்தமானதாகும். அத்திமலே சீனி தொழிற்சாலையின் 50 சதவீத உரிமையை அரசு கொண்டுள்ளது. 

மற்றைய தொழிற்சாலை 100 சதவீதம் தனியார் தொழிற்சாலை என்று தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில், வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்படும் வெள்ளைச் சீனியின் விலையிலேயே உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் வெள்ளைச் சீனியும் விற்பனை செய்யப்படுகிறது.

உள்நாட்டுச் சீனி உற்பத்தி நிறுவனங்கள் உற்பத்தி செலவை விடக் குறைவான விலையில் உள்ளூர் சந்தைக்கு வெள்ளைச் சீனியை வழங்குவதால், ஏற்படும் நட்டத்தை ஈடுசெய்யும் நோக்கில், ஒரு லீட்டர் எத்தனோல் விலையை ரூ. 300 வரை உயர்த்தியுள்ளது.

இதன் விளைவாக, மதுபான உற்பத்தி செலவு மாதத்திற்கு ரூ. 480 மில்லியன் அதிகரிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நாட்டில் உற்பத்தி செய்யப்படும் சீனிக்கு 18% VAT விதிக்கப்படுகிறது,

ஆனால் வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்படும் வெள்ளை சீனிக்கு அதே வரி விதிக்கப்படுவதில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

You may also like

செய்தி

‘கிளீன் ஸ்ரீ லங்கா’வின் கீழ் 34 புதிய திட்டங்கள்

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் அறிவுறுத்தல்களின்படி, அரசாங்கத்தின் பிரதான திட்டமாக செயற்படுத்தப்படும் “கிளீன் ஸ்ரீலங்கா” திட்டத்தின் கீழ், இந்த ஆண்டு 34 புதிய திட்டங்களை செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
செய்தி

ஐரோப்பாவில் புதிய வைரஸ்:நாடுகளின் எல்லைகள் மூடல்

மத்திய ஐரோப்பிய நாடான ஹங்கேரியில் உள்ள கால்நடை பண்ணையில் கால் மற்றும் வாய் நோய் முதலில் பரவியதாக தகவல் வெளியானது. இதை தடுக்க ஆயிரக்கணக்கான கால்நடைகள் கொல்லப்பட்டுள்ளன.