தொழில்நுட்பம்

மேற்கு மியான்மரில் வான்வழித் தாக்குதல் – குறைந்தது 33 பேர் உயிரிழப்பு

மியான்மரின் மேற்கு பகுதியில் அமைந்துள்ள ரக்கைன் மாநிலத்தில் இடம்பெற்ற வான்வழித் தாக்குதலில் குறைந்தது 33 பேர் உயிரிழந்துள்ளதாக கிளர்ச்சிக் குழுவினரும் உதவிப் பணியாளரும் தெரிவித்துள்ளனர். Kyauktaw நகரில் சந்தைப் பகுதியை அண்மித்த பகுதியில் திங்கட்கிழமை இந்தத் தாக்குதல் இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தாக்குதலில் மேலும் 36 பேர் காயமடைந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

தாக்குதல் இடம்பெற்ற பகுதி முக்கியமான மோதல் பகுதிகளில் இருந்து தொலைவில் அமைந்துள்ளதாக அப்பகுதியில் பணியாற்றும் உதவிப் பணியாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். உயிரிழந்தவர்களில் பொதுமக்களும் அடங்குவதாக தெரிவிக்கப்படும் நிலையில், சம்பவம் தொடர்பான தகவல்களை Reuters சுயாதீனமாக உறுதிப்படுத்த முடியவில்லை. தாக்குதலுக்கான காரணம் மற்றும் உயிரிழந்தவர்களின் முழுமையான விவரங்கள் தொடர்பாக மேலதிக தகவல்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.

மியான்மரில் 2021ஆம் ஆண்டு இராணுவ ஆட்சிக்கவிழ்ப்புக்குப் பின்னர் இராணுவத்துக்கும் பல்வேறு ஆயுதக் குழுக்களுக்கும் இடையிலான மோதல்கள் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றன. குறிப்பாக ரக்கைன் மாநிலத்தில் மோதல்கள் தீவிரமடைந்துள்ள நிலையில், வான்வழித் தாக்குதல்கள் மற்றும் ஆயுத மோதல்களால் பொதுமக்கள் பாதிக்கப்படுவது தொடர்பாக மனிதாபிமான அமைப்புகள் கவலை வெளியிட்டு வருகின்றன.

You may also like

தொழில்நுட்பம்

Reels மற்றும் Posts-க்கு 5 ஹாஷ்டேக் மட்டுமே அனுமதி;இன்ஸ்டாகிராமில் புதிய மாற்றம்

  • December 20, 2025
சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராமானது (Instagram), Reels மற்றும் Posts-ல் பயன்படுத்தப்படும் ஹாஷ்டேக்களின் (Hastag) எண்ணிக்கையை அதிகபட்சம் ஐந்து எனக் கட்டுப்படுத்தியுள்ளது. பயனர்கள் இதற்கு முன் ஒரு பதிவில்
தொழில்நுட்பம்

Samsung அறிமுகப்படுத்தும் புதிய Micro RGB TV

  • December 20, 2025
Samsung நிறுவனமானது 2026இல் தனது பிரீமியம் Micro RGB TV சீரீஸை விரிவுபடுத்துவதாக அறிவித்துள்ளது. புதிய வரிசையில் 55, 65, 75, 85, 100 மற்றும் 115