மேற்கு மியான்மரில் வான்வழித் தாக்குதல் – குறைந்தது 33 பேர் உயிரிழப்பு
மியான்மரின் மேற்கு பகுதியில் அமைந்துள்ள ரக்கைன் மாநிலத்தில் இடம்பெற்ற வான்வழித் தாக்குதலில் குறைந்தது 33 பேர் உயிரிழந்துள்ளதாக கிளர்ச்சிக் குழுவினரும் உதவிப் பணியாளரும் தெரிவித்துள்ளனர். Kyauktaw நகரில் சந்தைப் பகுதியை அண்மித்த பகுதியில் திங்கட்கிழமை இந்தத் தாக்குதல் இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தாக்குதலில் மேலும் 36 பேர் காயமடைந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. தாக்குதல் இடம்பெற்ற பகுதி முக்கியமான மோதல் பகுதிகளில் இருந்து தொலைவில் அமைந்துள்ளதாக அப்பகுதியில் பணியாற்றும் உதவிப் பணியாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். உயிரிழந்தவர்களில் பொதுமக்களும் அடங்குவதாக […]
