தொழில்நுட்பம்

Reels மற்றும் Posts-க்கு 5 ஹாஷ்டேக் மட்டுமே அனுமதி;இன்ஸ்டாகிராமில் புதிய மாற்றம்

சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராமானது (Instagram), Reels மற்றும் Posts-ல் பயன்படுத்தப்படும் ஹாஷ்டேக்களின் (Hastag) எண்ணிக்கையை அதிகபட்சம் ஐந்து எனக் கட்டுப்படுத்தியுள்ளது.

பயனர்கள் இதற்கு முன் ஒரு பதிவில் 30 ஹாஷ்டேக்கள் வரை சேர்க்க முடிந்தது.இது குறித்து Instagram நிறுவனம், “குறைந்த மற்றும் குறிக்கோள் கொண்ட ஹாஷ்டேக்கள், உள்ளடக்கத்தின் செயல்திறனை மேம்படுத்தும்” என தெரிவித்துள்ளது.பொதுவான ஹாஷ்டேக்கள் (#reels, #explore) Explore feed-இல் உள்ளடக்கத்தை முன்னிறுத்த உதவாது. மாறாக, செயல்திறனை பாதிக்கும் என நிறுவனம் கூறியுள்ளது.

இதன் மூலம், ஹாஷ்டேக்கின் தவறான பயன்பாட்டைத் தடுக்கும் நோக்கத்திலும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. “உங்கள் உள்ளடக்கத்துடன் தொடர்புடைய ஹாஷ்டேக்களை மட்டும் பயன்படுத்துங்கள்” என Instagram அறிவுறுத்தியுள்ளது.

இந்த புதிய விதிமுறையால், Instagram-ல் உள்ளடக்க உருவாக்குநர்கள் அதிக கவனத்துடன், தொடர்புடைய ஹாஷ்டேக்களைத் தேர்வு செய்ய வேண்டிய நிலை உருவாகியுள்ளது. இதன் மூலம், உள்ளடக்க கண்டுபிடிப்பு மற்றும் பயனர் அனுபவம் மேம்படும் என நிறுவனம் நம்புகிறது.

You may also like

தொழில்நுட்பம்

Samsung அறிமுகப்படுத்தும் புதிய Micro RGB TV

  • December 20, 2025
Samsung நிறுவனமானது 2026இல் தனது பிரீமியம் Micro RGB TV சீரீஸை விரிவுபடுத்துவதாக அறிவித்துள்ளது. புதிய வரிசையில் 55, 65, 75, 85, 100 மற்றும் 115
தொழில்நுட்பம்

AI உடன் இணைந்து செயல்பட்டால் வெற்றி உறுதி!

இன்றைய வேகமான உலகில் தொழில்நுட்ப வளர்ச்சியின் உச்சத்தில் இருக்கும் நாம், சாதாரண வளர்ச்சியைத் தாண்டி 100 மடங்கு வளர்ச்சியை அடைய வேண்டுமானால், நம்முடைய சிந்தனை முறையிலும் வேலை