Samsung நிறுவனமானது 2026இல் தனது பிரீமியம் Micro RGB TV சீரீஸை விரிவுபடுத்துவதாக அறிவித்துள்ளது.
புதிய வரிசையில் 55, 65, 75, 85, 100 மற்றும் 115 அங்குல (Inch) மாதிரிகள்(models) அறிமுகமாகின்றன. இதன் மூலம், சிறிய வீடுகள் முதல் பெரிய மண்டபங்கள் வரை அனைத்து இடங்களுக்கும் ஏற்ற வகையில் தொலைக்காட்சிகள் கிடைக்கின்றன.
சிறப்பு அம்சங்கள்
Micro RGB Technology
100 மைக்ரோமீட்டருக்கு குறைவான Red, Green, Blue LED-கள் தனித்தனியாக ஒளியை உமிழ்வதால், மிகத் துல்லியமான நிறக் கட்டுப்பாடு மற்றும் இயல்பான நிறத் தரத்தை வழங்குகிறது.
AI Processing
4K AI Upscaling Pro, AI Motion Enhancer Pro ஆகியவை நேரடியாக பிரகாசம், இயக்கம், தெளிவை மேம்படுத்துகின்றன.
Micro RGB AI Engine Pro
அடுத்த தலைமுறை AI சிப் மூலம் ஒவ்வொரு ஃப்ரேமையும் துல்லியமாக செயலாக்கி, உண்மையான காட்சியை உருவாக்குகிறது.
Color Booster & HDR Pro
BT.2020 wide color gamut-இல் 100 சதவீத நிறத் துல்லியத்தை வழங்குகிறது.
Glare Free Technology
ஒளி பிரதிபலிப்பை குறைத்து, எந்த சூழலிலும் தெளிவான காட்சியை வழங்குகிறது.
Vision AI Companion
Bixby அடிப்படையிலான LLM-சார்ந்த AI, conversational search, live translate, generative wallpaper போன்ற வசதிகளை வழங்குகிறது.
Audio
Dolby Atmos, Adaptive Sound Pro, Q-Symphony, புதிய Eclipsa Audio மூலம் 3D ஒலி அனுபவம் கிடைக்கும்.
Samsung தனது பிரீமியம் Micro RGB TVனை,எதிர்வரும் ஜனவரி லாஸ் வேகாஸில் இடம் பெறும் ‘CES 2026’ நிகழ்வில் அறிமுகப்படுத்துகிறது.

