சட்டவிரோதமாக ஐரோப்பா சென்ற இலங்கையர்கள் சுடப்பட்டு உயிரிழப்பு

  • November 1, 2025
  • 0 Comments

சட்டவிரோதமாக ஐரோப்பா சென்ற இலங்கையர் இருவர், துப்பாக்கிச் சூடு நடாத்தப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளனர். கிளிநொச்சி உருத்திரபுரத்தைச் சேர்ந்த சமுர்த்தி உத்தியோகத்தர் ஆட்கடத்தல் காரர்கள் மூலம் சட்டவிரோதமாக வெளிநாடு சென்ற நிலையில், கடந்த 30 ஆம் திகதி பெலாரஸ் எல்லையில் அந்நாட்டு இராணுவத்தினரால் சுடப்பட்டு உயிரிழந்துள்ளார். இதன்போது, அவருடன் இருந்த மற்றுமொரு இலங்கையரும் சுட்டுக் கொல்லப்பட்டதாக அந் நாட்டு தகவல்கள் தெரிவித்துள்ளன.குறித்த இருவரும் பெலாரஸ் நாட்டின் எல்லைப் பகுதியில் உள்ள அடர்காட்டுப் பகுதியில் விலங்குகள் நுழையும் பகுதிக்குள்ளால் மற்றுமொரு நாட்டுக்குள் நுழைய […]

செய்தி

பிரித்தானியா செல்வோருக்கு வெளியான முக்கிய அறிவிப்பு!

  • November 1, 2025
  • 0 Comments

பிரித்தானியா, விசா தொடர்பில் மீண்டும் ஒரு முக்கிய மாற்றத்தை செய்துள்ளது.அதாவது, ஒக்டோபர் மாதம் 30ஆம் திகதி நடைமுறைக்கு வந்த புதிய விதியின்படி, இனி பிரித்தானிய கடவுச்சீட்டுகளில் vignettes எனப்படும் முத்திரையிடப்படாது என குறிப்பிடப்பட்டுள்ளது. பிரித்தானியாவுக்கு, பணி, கல்வி மற்றும் குடும்ப விசாவில் வருவோர் மற்றும் அவர்களுடைய குடும்பத்தினரின் கடவுச்சீட்டுகளில் vignettes எனப்படும் முத்திரையிடப்படும் வழக்கம் இருந்துவந்தது.அந்தவகையில், இந்த முத்திரை இனி அவர்களுடைய கடவுச்சீட்டுகளில் முத்திரையிடப்படாது. அதற்கு பதிலாக, அவர்களுடைய புலம்பெயர்தல் நிலை (immigration status), இனி டிஜிட்டல் […]

ஹீட்டரை தொட்ட பெண் மரணம்

  • November 1, 2025
  • 0 Comments

பொக்காவல – ரம்புகேவெல பிரதேசத்தில் நேற்று (30) இரவு மின்சாரம் தாக்கி பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். மின்சார ஹீட்டர் ஒன்றைத் தொட்ட போது மின்சாரம் தாக்கி அவர் உயிரிழந்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது. இவ்வாறு உயிரிழந்தவர் கண்டி, ரம்புகேவெல பிரதேசத்தைச் சேர்ந்த 35 வயதான பெண் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் பொக்காவல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

செய்தி

ஆலையடிச்சோலை மயானத்தில் துப்பரவுப் பணி முன்னெடுப்பு

  • November 1, 2025
  • 0 Comments

நாளை இரண்டாம் திகதி இடம்பெறவுள்ள மரித்த விசுவாசிகள் வழிபாட்டு நிகழ்வினை முன்னிட்டு மட்டக்களப்பு புதூர் ஆலையடிச்சோலை மயானம் துப்பரவு செய்யும் பணிகள் மட்டக்களப்பு மாநகரசபையால் முன்னெடுக்கப்பட்டது.மாநகரசபை உறுப்பினர்களான வைத்திய கலாநிதி கே.ஈ.கருணாகரன் மற்றும் செ.வருணன் ஆகியோரின் வேண்டுகோளுக்கிணங்க மாநகரசபையினால் குறித்த துப்பரவுப் பணி முன்னெடுக்கப்பட்டது. இறந்த தமது உறவுகளுக்காக வழிபாடுகளை மேற்கொள்ளும் விதமாக வருடாவருடம் நவம்பர் மாதம் இரண்டாம் திகதி மரித்த விசுவாசிகள் தினமாக அனுஸ்டிக்கப்பட்டு வருகின்றது. இந் நிகழ்வினை முன்னிட்டே குறித்த துப்பரவுப் பணி முன்னெடுக்கப்பட்டது. […]

செய்தி

16 வயது மாணவியின் மார்பகத்தை பிடித்து தள்ளிய ஆசிரியர் கைது

  • November 1, 2025
  • 0 Comments

விளையாட்டு பயிற்சிகளுக்கிடையில் 16 வயதுடைய பாடசாலை மாணவி ஒருவரின் மார்பகங்களை பிடித்து தள்ளிவிட்ட ஆசிரியர் ஒருவர் செவ்வாய்க்கிழமை (28) அன்று கைது செய்யப்பட்டுள்ளார்.    மாரவில பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பாடசாலையொன்றின் விளையாட்டு துறை ஆசிரியரான 26 வயதுடைய இளைஞரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். தேசிய குழந்தைகள் பாதுகாப்பு அதிகார சபையின் தகவலுக்கமைய மாரவில பொலிஸ் நிலைய சிறுவர் மற்றும் மகளிர் பணியகம், பாதிக்கப்பட்ட மாணவியிடம் மேற்கொண்ட விசாரணையின் பின்னர் சந்தேக நபரான ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார்.  பாதிக்கப்பட்ட மாணவி […]

விளையாட்டு

பந்து தாக்கிய 17 வயது வீரர் உயிரிழப்பு

  • November 1, 2025
  • 0 Comments

அவுஸ்திரேலியாவின் மெல்பேணில் பயிற்சியொன்றின்போது பந்து தாக்கிய 17 வயதான பென் அஸ்டின் உயிரிழந்துள்ளார்.தலைக்கவசத்துடன் அஸ்டின் இருந்தபோதும் கழுத்து பகுதியை பாதுகாக்கும் ஸ்டெம் கார்ட்  கவசத்தை வலைப் பயிற்சியின்போது செவ்வாய்க்கிழமை (28) அவர் அணிந்திருக்கவில்லை. அந்நேரத்திலேயே பந்தை வீசும் சாதனத்தால் எறியப்பட்ட பந்தானது அவரது கழுத்தை தாக்கியுள்ளது. ஆபத்தான நிலையில் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட அஸ்டின், வியாழக்கிழமை (30) உயிரிழந்துள்ளார். கடந்த 2014ஆம் ஆண்டு பந்து தாக்கி உயிரிழந்த அவுஸ்திரேலியாவின் பில் ஹுயூஸுக்கும் இதே பகுதியிலேயே கழுத்தில் பந்து […]

செய்தி

பெட்ரோல் விலை குறைப்பு!

  • October 31, 2025
  • 0 Comments

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் மாதாந்த எரிபொருள் விலை திருத்தத்தின் படி வெள்ளிக்கிழமை (31) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள் விலை மாற்றம் செய்யப்படவுள்ளது. இதன்படி, ஒக்டேன் 92 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 5 ரூபாயால் குறைக்கப்படவுள்ளது.அதன் புதிய விலை 294 ரூபாயாகும்.சூப்பர் டீசல் லீற்றர் ஒன்றின் விலை 5 ரூபாயால் அதிகரிக்கப்படவுள்ளது.அதன் புதிய விலை 318 ரூபாயாகும் அதேவேளை, ஒக்டேன் 95 ரக பெற்றோல் ஒரு லீற்றரின் விலை 355 ரூபாயாகவும் மண்ணெண்ணெய் […]

செய்தி

தெற்காசியாவின் அதிக செலவுமிக்க நாடாக இலங்கை

  • October 31, 2025
  • 0 Comments

தெற்காசிய நாடுகளின் பிராந்திய கூட்டமைப்பின் இரண்டாவது மிக செலவுமிக்க நாடாக இலங்கை வகைப்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி, தனி ஒரு நபரின் வாழ்க்கைச் செலவு வாடகையைத் தவிர்த்து 506 டொலர் அல்லது 153,899 ரூபாய் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.  இது பயனர் உருவாக்கிய வாழ்க்கைச் செலவு புள்ளி விபர வலைத்தளமான Numbeo இன் தரவுகளை மையப்படுத்தித் தெரிவிக்கப்பட்டுள்ளது. சார்க் நாடுகளில், மாலைதீவு ஒரு நபருக்கு மாதம் 840.4 அமெரிக்க டொலர் செலவுடன் மிகவும் விலையுயர்ந்த நாடாகக் கருதப்படுகிறது.  Numbeo இணையதளத்தின்படி, கொழும்பு நகரில் நான்கு […]

செய்தி

அதிகரிக்கும் பணவீக்கம்

  • October 31, 2025
  • 0 Comments

நாட்டின் பணவீக்க விகிதம் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கொழும்பு நுகர்வோர் விலைக் குறியீட்டால் அளவிடப்படும் பணவீக்க விகிதம், செப்டம்பரில் 1.5% இலிருந்து ஒக்டோபரில் 2.1% ஆக அதிகரித்துள்ளது. உணவு பணவீக்கம் செப்டம்பரில் 2.9% இலிருந்து 3.5% ஆகவும், உணவு அல்லாத பணவீக்கம் செப்டம்பரில் 0.7% இலிருந்து 1.4% ஆகவும் அதிகரித்துள்ளது.

செய்தி

இலங்கையில் பொருட்கள் விற்பனை போர்வையில் மோசடி: விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

  • October 31, 2025
  • 0 Comments

மின்சார உபகரணங்கள், தளபாடங்கள், கைக்கடிகாரங்கள், அலங்காரப் பொருட்கள் விற்பனை போர்வையில் பெரிய அளவிலான பிரமிட் திட்ட மோசடியொன்று இடம்பெறுகின்றமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. நீண்ட காலமாக நடத்தப்பட்டு வரும் பிரமிட் திட்டத்தில் 50,000 க்கும் மேற்பட்டோர் சிக்கியுள்ளதாக குற்றப் புலனாய்வுத் துறை (CID) கோட்டை நீதவான் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளது. கொள்ளுப்பிட்டியில் அமைந்துள்ள பிரபலமான தனியார் நிறுவனத்தால் மேற்கொள்ளப்படும் இந்த பிரமிட் திட்டத்தில், நாடு முழுவதிலுமிருந்து ஒன்றரை லட்சத்திற்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் ஈடுபட்டுள்ளமையும் கண்டறியப்பட்டுள்ளது. இந்த மோசடி நுணுக்கமான முறையில் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் […]