செய்தி

 ஹைப்ரிட் மற்றும் புதிய எரிசக்தி வாகனங்களை அறிமுகப்படுத்தும் டேவிட் பீரிஸ்

  • October 31, 2025
  • 0 Comments

இலங்கையில் ஹைப்ரிட் மற்றும் புதிய எரிசக்தி வாகனங்கள் (NEV) அறிமுகப்படுத்தப்படவுள்ளன.டேவிட் பீரிஸ் குழுமத்தின் நான்கு சக்கர வாகனப் பிரிவான டேவிட் பீரிஸ் ஒட்டோமொபைல்ஸ் (பிரைவேட்) லிமிடெட் (DPA), உலகளாவிய ஒட்டோ உற்பத்தியாளர் GWM உடன் இணைந்து இந்த வாகனங்களை அறிமுகப்படுத்துவதாக தெரியவருகிறது.  ஒட்டோ மொபைல் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே இந்த கூட்டாண்மை அறிவிக்கப்பட்டது.இதன்படி, ஹவல் H6, ஹவல் GT, டேங்க் 300 மற்றும் டேங்க் 500 உள்ளிட்ட GWM இன் ஹைப்ரிட் மற்றும் பிளக்-இன் […]

செய்தி

பிரித்தானியாவில் உள்ள இலங்கை வைத்தியர்களுக்கு அவசர அழைப்பு

  • October 31, 2025
  • 0 Comments

பிரித்தானியாவுக்கு சென்ற இலங்கை வைத்தியர்கள் இலங்கைக்குத் திரும்புவது குறித்து பரிசீலிக்குமாறு சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ கோரியுள்ளார்.  அமைச்சர் ஜயதிஸ்ஸ, அண்மையில் பிரித்தானியாவுக்கு மேற்கொண்ட உத்தியோகபூர்வ விஜயத்தின் போது இந்தக் கோரிக்கையை விடுத்ததாக சமூக ஊடகங்களில் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தார். இலங்கை உயர் ஸ்தானிகராலயம், பிரித்தானியாவில் வசிக்கும் இலங்கை மருத்துவர்களுடன் ஏற்பாடு செய்த சந்திப்பில் கலந்து கொண்டதாகவும் அப்போது தான் இந்தக் கோரிக்கையை முன்வைத்ததாகவும் சுகாதார அமைச்சர் கூறினார். “இந்தக் கலந்துரையாடலின் போது, ​​பல்வேறு காரணங்களுக்காக நாட்டை […]

செய்தி தகவல்கள்

முதலாவது AI போர் விமானம் அமெரிக்காவில்

  • October 31, 2025
  • 0 Comments

உலகின் முதல் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தில் இயங்கக்கூடிய போர் விமானத்தை அமெரிக்காவின் KRATOS Defense & Security Solutions நிறுவனம் உருவாக்கியுள்ளது.”X-BAT எனப்படும் இந்த ஃபைட்டர் ஜெட், விமானி இல்லாமல் இயங்கும் தன்மை கொண்டது. இந்த விமானத்தை இயக்க ஓடு பாதை கூடத் தேவையில்லை, நிலத்திலிருந்து நேரடியாக புறப்படும் எனக் கூறப்படுகிறது.இந்த நவீன போர் விமானம், F-16 வகை இயந்திரத்தைப் பயன்படுத்தி 2,000 கடல் மைல்கள் (சுமார் 3,704 கிலோமீட்டர்கள்) தூரம் வரை, அதிகபட்சமாக 50,000 […]

விளையாட்டு

அவுஸ்திரேலியாவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்ற இந்தியா

  • October 31, 2025
  • 0 Comments

மகளிருக்கான உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் அவுஸ்திரேலியாவை அரையிறுதியில் வீழ்த்தி இந்திய அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.இந்தியாவில் நடந்து வரும் 13ஆவது மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இரண்டாவது அரைஇறுதியில் இந்திய- அவுஸ்திரேலிய அணிகள் பலப்பரீட்சை நடத்தின. நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற அவுஸ்திரேலிய அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.அதன்படி முதலில் களமிறங்கிய அவுஸ்திரேலிய அணி 49.5 ஓவர்களில் 338 ஓட்டங்கள் எடுத்து அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்தது.இந்திய அணி சார்பாக ஸ்ரீ சரணி, தீப்தி சர்மா […]

தகவல்கள்

Charger மாத்தி பாவிக்கலாமா?

  • October 30, 2025
  • 0 Comments

‘என்னுடைய சார்ஜரில் போட்டா தான் போன் சார்ஜ் ஆகும்’ இந்தக் கதை எல்லாம் இனி நம்பாதீங்க.வீட்டுக்கு வரும்  230V AC (Alternative current)  வோல்டேஜ் சப்ளையை போனுக்கேற்றபடி  (Direct Current ஆக) மாற்றுவது தான் சார்ஜர்களின் வேலை. 67W, 80W, 30W என சார்ஜர்களில் குறிப்பிடப்படுபவை அனைத்தும் அதனுடைய பவரை குறிக்கின்றன. பவர் அதிகமாக இருந்தால் பட்டரியும் சார்ஜ் அதிகமாக இருக்கும்.10W என குறிப்பிடப்பட்டிருந்தால் அதில் 5V(வோல்ட) 2A(ஆம்பியர்) இருக்கும். இந்த இரண்டையும் பெருக்கினால் 10W வாட்ஸ் […]

தகவல்கள்

ChatGPTயுடன் ஆபத்தான உரையாடல் Open AI வெளியிட்ட திடுக்கிடும் தகவல்

  • October 30, 2025
  • 0 Comments

ChatGPT-ஐ பயன்படுத்தும் ஒரு மில்லியனுக்கும் அதிகமான பயனர்கள் ஒவ்வொரு வாரமும் தவறான முடிவெடிக்கும் எண்ணங்களைப் பற்றி விவாதித்து வருவதாகவும் இது மிகவும் கவலைக்குரிய விஷயம் என்றும் அந்தநிறுவனம் தெரிவித்துள்ளது. உலகில் தொழில்நுட்பத்தின் உதவியுடன் மனிதர்களுக்கு இடையிலான தொடர்பு முன்னெப்போதும் இல்லாத அளவு எளிமையாகியுள்ள நிலையில் நவீன யுக மனிதர்கள் தனிமைப்பட்டு உள்ளனர். மேலும், இளைய தலைமுறையினரிடையே மனத் திடம் குறைந்து சிறிய விஷயங்களுக்கே தவறான முடிவெடுக்கும் வரை செல்லும் போக்கும் அதிகரித்துள்ளது.இதை மெய்ப்பிக்கும் வண்ணம் முன்னணி செயற்கை […]

சர்வதேச கூடைப்பந்தாட்டப் போட்டிக்கு மட்டு சென். மைக்கல் செய்தி விளையாட்டு

சர்வதேச கூடைப்பந்தாட்ட போட்டிக்கு சென். மைக்கல்

  • October 27, 2025
  • 0 Comments

தாய்லாந்தில் இடம்பெறும் சர்வதேச கூடைப்பந்தாட்ட போட்டிக்காக மட்டக்களப்பு சென். மைக்கல் கல்லூரியின் 17 வயதுக்குட்பட்ட கூடைப்பந்தாட்ட அணி, கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இருந்து தாய்லாந்துக்கு கடந்த வெள்ளிக்கிழமை (24) பயணித்தது. இலங்கை, பூட்டான், மாலைதீவு, தாய்லாந்து ஆகிய நான்கு நாடுகளைச் சேர்ந்த 17 வயதுக்கு உட்பட்டவர்கள் பங்குபற்றும் இந்த சர்வதேச கூடைபந்தாட்ட சுற்றுப்போட்டி தாய்லாந்தில் இடம்பெறவுள்ளது.   இலங்கையில் இருந்து இந்த சுற்றுப் போட்டியில் மட்டக்களப்பு சென்.  மைக்கல் கல்லூரி அணி, கொழும்பு ஆனந்தா […]

செய்தி

12 வயதுக்குட்பட்டவர்கள் போன் பயன்படுத்த விரைவில் தடை

  • October 27, 2025
  • 0 Comments

இலங்கையில் 12 வயதுக்குட்பட்ட பாடசாலைக் குழந்தைகள் ஸ்மார்ட்போன் பயன்படுத்துவதைத் தடை செய்ய திட்டமிட்டுள்ளதாக குழந்தைகள் நல அமைச்சர் சரோஜா போல்ராஜ் அறிவித்தார். பாடசாலை சிறார்கள் கலந்து கொண்ட விழாவில் பேசிய அமைச்சர், 12 வயதுக்குட்பட்ட எந்தப் பிள்ளையும் மொபைல் போன் வைத்திருக்கவோ அல்லது பயன்படுத்தவோ அனுமதிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்ய அரசாங்கம் ஒரு முடிவை எடுக்கும் என்றார். இந்த நடவடிக்கை, குழந்தைகளை அதிகப்படியான திரை நேரத்திலிருந்தும் தீங்கு விளைவிக்கும் ஒன்லைன் உள்ளடக்கத்திற்கு ஆளாகாமல் பாதுகாப்பதையும் ஆரோக்கியமான குழந்தைப் […]

சினிமா

“விஜய் கேட்ட அந்த ஒரு கேள்வியால் நடிப்பை விட்டேன்”

  • October 27, 2025
  • 0 Comments

நடிகை ரோஜா செல்வமணி தெலுங்கு திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்து தனக்கென ஒரு பெயரை உருவாக்கினார். தெலுங்கில் அனைத்து நட்சத்திர ஹீரோக்களுடனும் நடித்துள்ளார். தமிழ் சினிமாவில் 90களின் துவக்கத்தில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் ரோஜா. கமல்ஹாசன் தவிர்த்து அனைத்து முன்னணி நட்சத்திரங்களுடனும் நடித்த இவர், இயக்குனர் ஆர்.கே. செல்வமணியை திருமணம் செய்து கொண்டு நடிப்பை விட்டு ஒதுங்கினார். பின்னர் ஆந்திர அரசியலிலும் நுழைந்து எம்எல்ஏ, அமைச்சராக பொறுப்பு வகித்தார். தற்போதும் தீவிர அரசியலில் ஈடுபட்டு வருகிறார். அவர் […]

செய்தி

மினுவாங்கொடையில் கொடூரமான முறையில் பெண் கொலை

  • October 26, 2025
  • 0 Comments

கம்பஹா – மினுவாங்கொடையில் வீட்டில் இருந்த 71 வயது பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.பொலிஸாரின் தகவலின்படி, இது ஒரு கொடூரமான மற்றும் மோசமான குற்றம் என்று விபரிக்கப்பட்டுள்ளது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் தனது கணவர் இறந்ததிலிருந்து தனியாக வசித்து வந்த இந்த பெண், அடையாளம் தெரியாத நபர்களால் தாக்கப்பட்டு, பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது. தாக்குதல் நடத்தியவர்கள் அவரது முகத்தில் மிளகாய்ப் பொடியை வீசி கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளனர்.சம்பவத்தில் தொடர்புடைய சந்தேக நபர்களை அடையாளம் […]