செய்தி

பிரித்தானியா செல்வோருக்கு வெளியான முக்கிய அறிவிப்பு!

பிரித்தானியா, விசா தொடர்பில் மீண்டும் ஒரு முக்கிய மாற்றத்தை செய்துள்ளது.அதாவது, ஒக்டோபர் மாதம் 30ஆம் திகதி நடைமுறைக்கு வந்த புதிய விதியின்படி, இனி பிரித்தானிய கடவுச்சீட்டுகளில் vignettes எனப்படும் முத்திரையிடப்படாது என குறிப்பிடப்பட்டுள்ளது.

பிரித்தானியாவுக்கு, பணி, கல்வி மற்றும் குடும்ப விசாவில் வருவோர் மற்றும் அவர்களுடைய குடும்பத்தினரின் கடவுச்சீட்டுகளில் vignettes எனப்படும் முத்திரையிடப்படும் வழக்கம் இருந்துவந்தது.அந்தவகையில், இந்த முத்திரை இனி அவர்களுடைய கடவுச்சீட்டுகளில் முத்திரையிடப்படாது.

அதற்கு பதிலாக, அவர்களுடைய புலம்பெயர்தல் நிலை (immigration status), இனி டிஜிட்டல் முறையில், e-visaவாக பதிவு செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.பிரித்தானியா தனது புலம்பெயர்தல் அமைப்பை முழுமையாக டிஜிட்டல் மயமாக மாற்றுவதின் மற்றொரு படியாக இந்த மாற்றத்தைச் செய்துள்ளதாக பிரித்தானிய உள்துறை அலுவலகம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

You may also like

செய்தி

‘கிளீன் ஸ்ரீ லங்கா’வின் கீழ் 34 புதிய திட்டங்கள்

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் அறிவுறுத்தல்களின்படி, அரசாங்கத்தின் பிரதான திட்டமாக செயற்படுத்தப்படும் “கிளீன் ஸ்ரீலங்கா” திட்டத்தின் கீழ், இந்த ஆண்டு 34 புதிய திட்டங்களை செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
செய்தி

ஐரோப்பாவில் புதிய வைரஸ்:நாடுகளின் எல்லைகள் மூடல்

மத்திய ஐரோப்பிய நாடான ஹங்கேரியில் உள்ள கால்நடை பண்ணையில் கால் மற்றும் வாய் நோய் முதலில் பரவியதாக தகவல் வெளியானது. இதை தடுக்க ஆயிரக்கணக்கான கால்நடைகள் கொல்லப்பட்டுள்ளன.