விளையாட்டு

பந்து தாக்கிய 17 வயது வீரர் உயிரிழப்பு

அவுஸ்திரேலியாவின் மெல்பேணில் பயிற்சியொன்றின்போது பந்து தாக்கிய 17 வயதான பென் அஸ்டின் உயிரிழந்துள்ளார்.தலைக்கவசத்துடன் அஸ்டின் இருந்தபோதும் கழுத்து பகுதியை பாதுகாக்கும் ஸ்டெம் கார்ட்  கவசத்தை வலைப் பயிற்சியின்போது செவ்வாய்க்கிழமை (28) அவர் அணிந்திருக்கவில்லை. அந்நேரத்திலேயே பந்தை வீசும் சாதனத்தால் எறியப்பட்ட பந்தானது அவரது கழுத்தை தாக்கியுள்ளது.

ஆபத்தான நிலையில் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட அஸ்டின், வியாழக்கிழமை (30) உயிரிழந்துள்ளார்.

கடந்த 2014ஆம் ஆண்டு பந்து தாக்கி உயிரிழந்த அவுஸ்திரேலியாவின் பில் ஹுயூஸுக்கும் இதே பகுதியிலேயே கழுத்தில் பந்து தாக்கியிருந்தது.

You may also like

விளையாட்டு

சென். பற்றிக்ஸ் வெற்றிக் கிண்ணத்தை சுவீகரித்தது

யாழ். சென். பற்றிக்ஸ் கல்லூரிக்கும் வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரிக்கும் இடையில் சென். பற்றிக்ஸ் கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற 50 ஓவர் கிரிக்கெட் போட்டியில் ஐந்து விக்கெட்களால் வெற்றிபெற்று
விளையாட்டு

சென்னை சுப்பர் கிங்ஸிடம் வீழ்ந்த லக்னோ சுப்பர் ஜெயண்ட்ஸ்

ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் எகானா கிரிக்கெட் மைதானத்தில் இன்று (14)நடைபெறும் லீக் போட்டியில் மகேந்திர சிங் தோனி தலைமையிலான சென்னை சுப்பர் கிங்ஸ்- ரிஷப் பந்த் தலைமையிலான லக்னோ