செய்தி

கனடாவிலிருந்து யாழ் வந்த யுவதி உயிரிழப்பு

கனடாவிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்த யுவதி ஒருவர் புற்றுநோயால் உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் கடந்த ஐந்தாம் திகதி இடம்பெற்றுள்ளது.

கனடாவின் ஸ்காபரோவைச் சேர்ந்த சத்தீஸ்வரன் சயினகா என்ற 22 வயதுடைய யுவதியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,கனடாவில் வாழ்ந்து வந்த யாழ்ப்பாணத்தை சேர்ந்த குறித்த யுவதி சுற்றுலாவுக்காக யாழ்ப்பாணம் வருகை தந்துள்ளார்.

இவர், வடமராட்சி – கல்லுவம் பிரதேசத்தை பூர்வீகமாகக் கொண்டவர் என தெரிவிக்கப்படுகின்றது.

இந்தநிலையில், குறித்த யுவதி தெல்லிப்பழை புற்றுநோய் சிகிச்சை நிலையத்தில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கடந்த ஐந்தாம் திகதி உயிரிழந்துள்ளார்.

குறித்த யுவதியின் இறுதிக் கிரியைகள் நாளை (08) கல்லுவத்தில் உள்ள அவரது இல்லத்தில் இடம்பெறவுள்ளது.

குறித்த சிறுமியின் திடீர் மரணத்தால் வடமராட்சி கல்லுவம் பிரதேசம் சோகத்தில் மூழ்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

You may also like

செய்தி

‘கிளீன் ஸ்ரீ லங்கா’வின் கீழ் 34 புதிய திட்டங்கள்

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் அறிவுறுத்தல்களின்படி, அரசாங்கத்தின் பிரதான திட்டமாக செயற்படுத்தப்படும் “கிளீன் ஸ்ரீலங்கா” திட்டத்தின் கீழ், இந்த ஆண்டு 34 புதிய திட்டங்களை செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
செய்தி

ஐரோப்பாவில் புதிய வைரஸ்:நாடுகளின் எல்லைகள் மூடல்

மத்திய ஐரோப்பிய நாடான ஹங்கேரியில் உள்ள கால்நடை பண்ணையில் கால் மற்றும் வாய் நோய் முதலில் பரவியதாக தகவல் வெளியானது. இதை தடுக்க ஆயிரக்கணக்கான கால்நடைகள் கொல்லப்பட்டுள்ளன.