செய்தி

ஆப்பிள் ஐபோன் பதினேழு புதிய அறிமுகம்

ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 17 வரிசை தொலைபேசி சந்தைகளுக்கு அறிமுகமாகியுள்ளது. இவற்றின் அறிமுக நிகழ்ச்சி அமெரிக்காவில் இடம்பெற்றுள்ளது.

ஐபோன் 17, ஐபோன் 17 ப்ரோ, ஐபோன் 17 ப்ரோ மேக்ஸ் மற்றும் ஐபோன் 17 ஏர் ஆகிய தொலைபேசிகளும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

இவற்றுடன் ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 11, ஆப்பிள் வாட்ச் எஸ் இ 13 மற்றும் ஆப்பிள் வாட்ச் அல்ட்ரா 3 ஆகிய ஸ்மார்ட் கைக் கடிகாரங்களும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

ஐபோன் 17 ப்ரோவின் 256 ஜிபி ஸ்டோரேஜ் வேரியன்ட் $1,099 விலையில் (333,451 இலங்கை மதிப்பில்) ஆரம்பமாகிறது,

ஐபோன் 17 ப்ரோ மேக்ஸ் 256 ஜிபி மாடலின் ஆரம்ப விலை (363,792 இலங்கை மதிப்பில்) விலையிலும் கிடைக்கின்றன.

இந்த போன்கள் காஸ்மிக் ஆரஞ்சு, டீப் ப்ளூ மற்றும் சில்வர் ஆகிய வண்ண விருப்பங்களில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

ஐபோன் 17 ப்ரோ மாடல்களுக்கான முன்பதிவு செப்டம்பர் 12 ஆம் திகதி ஆரம்பமாகிறது. இந்த ஸ்மார்ட்போன்கள் செப்டம்பர் 19 ஆம் திகதி முதல் உலகளவில் விற்பனைக்கு வரும்.

You may also like

செய்தி

‘கிளீன் ஸ்ரீ லங்கா’வின் கீழ் 34 புதிய திட்டங்கள்

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் அறிவுறுத்தல்களின்படி, அரசாங்கத்தின் பிரதான திட்டமாக செயற்படுத்தப்படும் “கிளீன் ஸ்ரீலங்கா” திட்டத்தின் கீழ், இந்த ஆண்டு 34 புதிய திட்டங்களை செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
செய்தி

ஐரோப்பாவில் புதிய வைரஸ்:நாடுகளின் எல்லைகள் மூடல்

மத்திய ஐரோப்பிய நாடான ஹங்கேரியில் உள்ள கால்நடை பண்ணையில் கால் மற்றும் வாய் நோய் முதலில் பரவியதாக தகவல் வெளியானது. இதை தடுக்க ஆயிரக்கணக்கான கால்நடைகள் கொல்லப்பட்டுள்ளன.