சினிமா

அர்ஜுன் தாஸின்’பாம்’படத்திற்கு’யு’ சான்றிதழ்

நடிகர் அர்ஜுன் தாஸ் தமிழ் சினிமாவில் மாஸ்டர், கைதி, விக்ரம் உள்ளிட்ட படங்களில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர்.

அதன் பிறகு ஹீரோவாக உருவெடுத்த அர்ஜுன் தாஸ், அநீதி, ரசவாதி போன்ற பல படங்களில் நடித்திருக்கிறார்.

இவர் தமிழ் மொழியில் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழி படங்களிலும் பணியாற்றி வருகிறார்.

இவர் தற்போது பாம் என்ற படத்தில் நடித்து கதாநாயகனா நடித்து முடித்துள்ளார். இதனை ‘சில நேரங்களில் சில மனிதர்கள்’ என்ற படத்தை இயக்கிய விஷால் வெங்கட் இயக்கியுள்ளார்.

இப்படத்தில், அர்ஜுன் தாசுக்கு ஜோடியாக ஷிவாத்மிகா ராஜசேகர் நடித்துள்ளார். இவர்களுடன், காளி வெங்கட், நாசர், அபிராமி, சிங்கம்புலி, பாலசரவணன், டிஎஸ்கே, பூவையார், சில்வென்ஸ்டன் ஆகியோர் முக்கிய துணை வேடங்களில் நடித்துள்ளனர்.

இப்படத்திற்கு டி. இமான் இசையமைக்கிறார். இப்படம் நாளை திரையரங்குகளில் வெளியாகி உள்ளது. இந்த நிலையில், பாம் படத்திற்கு தணிக்கை வாரியம் ‘யு’ சான்றிதழ் வழங்கியுள்ளது.

You may also like

சினிமா

வசூலில் சாதனை படைக்கும் ‘குட் பேட் அக்லி’

அஜித்தின் ‘குட் பேட் அக்லி’ திரைப்படம் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இதனால் முதல் நாள் வசூல் மட்டுமே தமிழ்நாட்டில் ரூ. 30.9 கோடி என அறிவிக்கப்பட்டது.அஜித்தின்
சினிமா

‘காணாமல் போனதற்கு காரணம் இதுதான்…’நஸ்ரியா

நடிகை நஸ்ரியா சமீப நாட்களாக பொது வெளிக்கு வரவில்லை. இதற்கான காணரம் பற்றி கடிதம் எழுதியுள்ளார். இக்கடிதம் தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாக பகிரப்பட்டு வருகிறது.கேரள திரைப்பட